நிதி அகர்வால் தமிழ் கத்துக்குறாங்கனு தெரியும்.. எப்படி கத்துக்குறாருன்னு பாருங்க.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை நிதி அகர்வால் தமிழ் கற்றுக்கொள்ளும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை நிதி அகர்வால். இந்தி மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த நிதி அகர்வால் பிறந்தது ஹைதராபாத்தில்.
ஆனால் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்தான். தமிழில் பூமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தமிழ் கற்கும் நடிகை
இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்று வருவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அவர் எப்படி தமிழ் மொழியை கற்கிறார் என்ற போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நிதி அகர்வால்.

எப்படி எழுதி வைத்திருக்கிறார்
அதில் ஒவ்வொரு இங்கிலிஷ் வார்த்தைக்கும் தமிழின் அர்த்தத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதாவது தங்கிலிஷில் எழுதி படித்து வருகிறார். who என்பதற்கு yaar என எழுதி வைத்து தமிழை கற்று வருகிறார் நிதி அகர்வால்.

கண்டுபிடியுங்கள்
இதுபோன்ற பல வார்த்தைகளை தனது நோட்புக்கில் எழுதி வைத்துள்ளார் நிதி அகர்வால். அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் அவர், புதிய மொழி கற்றுக் கொள்கிறேன் என்ன மொழி என்று கண்டுபிடியுங்கள் என கூறியுள்ளார்.

பழமையான மொழி
அதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் கற்றுக்கொண்டிருப்பது எல்லா மொழிக்குமான தாய் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். சிலர் ஆமாம் மேடம் நீங்கள் உலகின் மதிப்பு மிக்க மற்றும் பழமையான தமிழ் மொழியை கற்று கொண்டிருக்கிறீர்கள் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











