இந்தி படத்தில் கமிட்டான சிம்பு பட நடிகை.. கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி.. நடிப்பில் கவனம் !

சென்னை : பல ஆண்டுகளுக்குப்பிறகு இந்தி படத்தில் கமிட்டாகி உள்ளார் நிதி அகர்வார்.

தமிழ் திரைத்துறையில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், ஒரு சில திரைப்படங்களிலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நிதி அகர்வால்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார்.

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

நடிகை நிதி அகர்வால், 2017ம் ஆண்டு முன்னா மைகேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, சவ்யாசாசி என்ற தெலுங்கு படத்தில் என்ட்ரி கொடுத்து ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இருபடங்களும் ஒரே நேரத்தில்

இருபடங்களும் ஒரே நேரத்தில்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஈஸ்வரன் திரைப்படமும் ஜெயம்ரவியுடன் நடித்த பூமி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானது. ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற பெற்ற மாங்கல்யாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிரபலமானார் நிதி அகர்வால்.

உதயநிதியுடன்

உதயநிதியுடன்

நிதிஅகர்வால் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் ஹரி ஹர வீர மல்லு என்ற தெலுங்கு படத்திலும், ஹீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தி படத்தில்

இந்தி படத்தில்

இந்நிலையில், நிதி அகர்வால், தியேட்டர்களில் படம் பார்ப்பதுதான் தனக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளார். ஓடிடியில் அதிகமான திரைப்படங்களைப் பார்க்கிறேன். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும், ஒரு படத்தை திரையரங்கில் பார்ப்பது தனி மகிழ்ச்சியைத் தரும் என்றார். நல்ல கதையை தேர்வு செய்து நடிப்பதில், எனது முழுகவனமும் இருக்கிறது. முன்னா படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு, இப்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறேன் இது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

நிதி அகர்வால், நடிகர் சிம்புவை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அவற்று முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகன திரைப்படங்களில் எனது முழுகவனமும் இருப்பதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X