கூந்தலில் பூ, கண்களில் கனவு..பிரபல நடிகையின் கவிதை கேப்ஷன்..ட்ரீம்ஸை கேட்டு அடம்பிடிக்கும் ரசிகர்கள்

By

சென்னை: கவிதையாக கேப்ஷன் கொடுத்த பிரபல ஹீரோயினிடம் அவரது கனவு என்ன என்பதை கேட்டு ரசிகர்கள் அடம்பிடிக்கின்றனர்.

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மண், அடுத்து இயக்கும் படம், 'பூமி'. இதில் ஜெயம் ரவி ஹீரோ. இதில் ஹீரோயினாக நடிக்கிறார் நிதி அகர்வால்.

இந்தப் படம் ஜெயம் ரவிக்கு 25-வது படம். டி.இமான் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

முன்னா மைக்கேல்

முன்னா மைக்கேல்

லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தடைபட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள நிதி அகர்வால், இந்தியில் டைகர் ஷெராப் ஜோடியாக முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அதிக வாய்ப்பில்லை. இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அவர் நடித்த, ஐஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானது. ராம், ரபா நடேஷ், உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் நடிகை நிதி அகர்வால்.

தமிழ் கற்கிறார்

தமிழ் கற்கிறார்

இந்நிலையில் அவர், தமிழ் மொழியை கற்று வருவதாகக் கூறியிருந்தார். அவர் எப்படி தமிழ் மொழியை கற்கிறார் என்ற போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில் ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் அர்த்தத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதாவது தங்கிலிஷில் எழுதி படித்து வருகிறார். who என்பதற்கு yaar என எழுதி வைத்து தமிழ்க் கற்று வருகிறார்.

கனவுகளில் கனவுகள்

கனவுகளில் கனவுகள்

இந்நிலையில் பல நடிகைகள் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் நடிகை நிதி அகர்வாலும் ஒருவர். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, 'என் கூந்தலில் பூவும் என் கனவுகளில் கனவுகளும் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

உங்களைப் போலவே

உங்களைப் போலவே

இதற்கு ரசிகர்கள் தங்கள் கமென்ட்களை அள்ளி வீசியுள்ளனர். எப்போதும் அந்தப் பூக்களை வைத்திருங்கள். கனவு கண்டுகொண்டே இருங்கள் என்று ஒருவர் கூறியுள்ளார். உங்க புன்னகை வசியப்படுதுகிறது என்றும் சிலர் கேப்ஷனும் உங்களைப் போலவே அழகாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

Recommended Video

'Just another day all things green' - Nidhhi Agerwal shared fitness video on Instagram
சொல்ல முடியுமா?

சொல்ல முடியுமா?

இதற்கு முன் பதிவிட்ட புகைப்படங்களை விட இந்த போட்டோஸ்தான் அழகு என்று சிலர் கூறியுள்ளனர். கண்களில் கனவுன்னு சொல்றீங்களே, என்ன கனவுன்னு சொல்ல முடியுமா? என்று கேட்டு சிலர் செல்லமாக அடம்பிடித்துள்ளனர். குழந்தை மாதிரி போஸ் கொடுத்திருக்கீங்க.. இருந்தாலும் அருமையாக இருக்கு என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X