ஈஸ்வரன் பட நடிகையின் நளினமான போஸ்..ஜொள்ளுவிடும் ரசிகர்கள் !

சென்னை : ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவின் புகைப்படங்கள் தொடர்ந்து இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அதில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை நிதி அகர்வாலின் புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் இதுவரை நடித்து வந்த நிதி அகர்வால் ஈஸ்வரன், பூமி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

இவ்வாறு திரைப்படங்களில் நடித்து வருவது ஒருபுறம் இருக்க இணையதளத்தில் இவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் பற்ற வைத்து வருகிறது.

சிலிம்மாக மாறி

சிலிம்மாக மாறி

கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருவது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் தான். உடல் எடையை தாறுமாறாக ஏற்றியுள்ளதை பார்த்த பலரும் சிம்பு அவ்வளவுதான், சினிமாவில் இனி நிலைப்பது கஷ்டம் எனக்கூறி வர அனைவரின் முகத்திலும் கரியை பூசியவாறு கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்து இப்பொழுது சிலிம்மாக மாறியுள்ளார்.

சிம்புவிற்கு ஜோடியாக

சிம்புவிற்கு ஜோடியாக

சிலிம்மாக மாறிய புது கெட்டப்பில் சூடோடு சூடாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் திரைப்படத்தில் கலக்கலான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்து வருகிறார்.

ராக்கெட் வேகத்தில்

ராக்கெட் வேகத்தில்

நிதி அகர்வால் ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளதைத் தொடர்ந்து தமிழில் பூமி திரைப்படத்தின் மூலம் அறிமுகத்தை கொடுக்க நினைக்க பூமி திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் இருக்க, அடுத்து நடித்து வரும் ஈஸ்வரன் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

பூமி மற்றும் ஈஸ்வரன் என இரண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்கள் நிதி அகர்வாலுக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே நிதி அகர்வால் அவ்வப்போது வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தமிழில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளது.

புத்துணர்ச்சி மிகுந்த கவர்ச்சி

புத்துணர்ச்சி மிகுந்த கவர்ச்சி

இந்நிலையில் இப்பொழுது நாற்காலியில் நளினமான உட்கார்ந்து கொண்டு தனது முன்னழகை காட்டியவாறு கிறங்க வைக்கும் பார்வையில் இருக்கும் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இந்த வெள்ளை நிற புது புறாவின் புத்துணர்ச்சி மிகுந்த கவர்ச்சிப் புகைப்படம் பார்க்கும் அனைவரையும் பற்றவைத்து வருகிறது. இதைப்பார்த்த இளம் ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X