என்னடா இது.. கலர் கலரா இருக்கு.. இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நிதி அகர்வால்!

சென்னை : பப்ளி நடிகையான நிதி அகர்வால் அட்டகாசமான போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இணையத்தையே திணறடித்துள்ளார்.

நிதி அகர்வால் முன்னா மைக்கேல் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் தெலுங்கில், அவர் நடித்த சவ்ய சாச்சி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

தற்போது நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு ரசிகர்களின் பிடித்தமான நடிகையாக இருக்கிறார்.

நடிகை நிதி அகர்வால்

நடிகை நிதி அகர்வால்

பளபளக்கும் உடம்பு... பார்த்தவுடன் உச்சு கொட்டவைக்கும் அழகு என ஒட்டுமொத்த அழகுக்கும் சொந்தக்காரியாக இருக்கிறார் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில், ரோமியோ ஜூலியட், போகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவான பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். விவசாயத்தை மையக்கருவாக கொண்டு உருவான இப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

அதே போல ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்தார், இப்படத்தில் சிம்பு உடல் எடை குறைந்து சும்மா ஸ்மார்ட்டாக இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் மாங்கல்யம் தந்துனானே பாடல் ஹிட்டடித்தது. ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதி இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவியது.

உதயநிதிக்கு ஜோடியாக

உதயநிதிக்கு ஜோடியாக

ஒரே நேரத்தில் தமிழில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகி நிதி அகர்வாலுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பரான த்ரில்லர் கதையான கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கவர்ச்சி அலப்பறை

கவர்ச்சி அலப்பறை

நல்ல திறமையும் அழகும் இருந்தபோதும் நிதி அகர்வாலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு படவாய்ப்பு அமையாததால், பட வாய்ப்பை பெற அவ்வப்போது கவர்ச்சி உடையில் அலப்பறை கொடுத்து வருகிறார். தற்போது, இவர் பூப்போட்ட மார்டன் உடையில் தனது அழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

தெலுங்கு படத்தில்

தெலுங்கு படத்தில்

தெலுங்கிலும் நிதி அகர்வாலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க இப்பொழுது பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X