சின்ன சின்ன ரியாக்சன்ஸ்.. நித்தி அகர்வாலின் அழகிய புகைப்படம் !
சென்னை : நித்தி அகர்வால், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் திரைப்படத்திலேயே பாலிவுட் நடிகர் டைகர் ஷராப் உடன் ஜோடி சேர்ந்தார் நித்தி அகர்வால். அவருடன் ஜோடி சேருவது பலருக்கு எட்டா கனியாகவே தற்போதும் உள்ளது. சபீர் கான் இயக்கிய முண்ணா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார் நித்தி அகர்வால்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அங்கு இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த மிஸ்டர் மஞ்சு மற்றும் இஸ்மாட் சங்கர் ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சக்கை போடு போட்டன. இவருக்கு அதிகம் பட வாய்ப்புக்கள் குவிந்தன.
இஸ்மாட் சங்கர் படத்தில் இவர் ஆடிய தீம்மாக் கராப் ஆட்டம் இன்றளவும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் அவருடன் நடித்து வருகிறார் நித்தி அகர்வால் இப்படத்தை லக்ஷ்மன் இயக்குகிறார்.
இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் தெலுங்கு நடிகர் ராம் போத்தினி உடன் பிக்பாஸ் இல்லத்திற்கு கேஸ்ட் ஆக சென்றார், அவர் சென்ற அந்த எப்பிசோட் மிகவும் பிரபலமானது. இதுவே படத்திற்கு ஒரு நல்ல ப்ரொமோசனாக அமைந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் இவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவின் மஞ்ச காட்டு மைனா போல மஞ்சள் உடையில் பல க்யூடான ரீயாக்சன்களுடன் போட்டோஷுட் எடுத்துள்ளார் நித்தி அகர்வால்.
இதே போல ராஷ்மிகா மந்தனாவும் க்யூட் ரீயாக்சன் கொடுத்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைபடங்களை வெளியிட்டார் அதே போல தற்போது நித்தியும் அதே பாணியில் இறங்கி விட்டார் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். அது சரி தமிழில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் க்யூடான புகைப்படங்கள் பதிவிடவேண்டும். அதன் பின் தான் ஹாட் ஆன புகைபடங்கள் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











