வெள்ளை உடையில்.. கொள்ளை அழகில்.. நித்தி அகர்வால்.. ஜிலீர் போட்டோசூட் !
ஐதராபாத் : வெள்ளை உடையில் கொள்ளை அழகில் நித்தி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மாடல், நடனக் கலைஞர் மற்றும் பாலிவுட் நடிகையுமான நித்தி அகர்வால், சப்பீர் கான் இயக்கிய முண்ணா மைக்கேல் திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகர் டைகர் ஷராப் உடன் ஜோடி சேர்தார். இது பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

முண்ணா மைக்கேல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. பின் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த நித்தி. அங்கு அவர் பெரிதும் பேசப்படும் நடிகையானார். தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த மிஸ்டர் மஞ்சு மற்றும் இஸ்மாட் சங்கர் ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சக்கை போடு போட்டன. இவருக்கு அதிகம் பட வாய்ப்புக்கள் குவிந்தன.

இஸ்மாட் சங்கர் படத்தில் இவர் ஆடிய ஆட்டம் இன்றளவும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் அவருடன் நடித்து வருகிறார் நித்தி அகர்வால் இப்படத்தை லக்சமன் இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவர் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 பங்கேற்றுள்ளார். நடிகர் ராம் போத்தினி உடன் பிக் பாஸ் இல்லத்திற்கு கேஸ்ட் ஆகவும் சென்றுள்ளார் நித்தி. மேலும், பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

தெலுங்கை போல தமிழிலும் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட நித்தி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இவர் பின்னால் உள்ளது.
வெள்ளை உடையில் கொள்ளை அழகில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் நித்தி அகர்வால் பார்க்கும் பார்வையில் ரசிகர்களை தன் காந்த சக்தியால் இழுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











