பட வாய்ப்புக்காக இப்படியா?... கவர்ச்சியில் அதகளம் செய்யும் நிதி அகர்வால் !

சென்னை : வெண்ணையில் செய்த பொம்மை போல, நல்ல கொழுக்கு மொழுக்குனு இருப்பவர் நிதி அகர்வால்.

தமிழ் திரைத்துறையில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், ஒரு சில திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

தற்போது இணையத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை பெற்று டிராண்டாகி வருகிறது.

நிதி அகர்வாலின் திரைப்பயணம்

நிதி அகர்வாலின் திரைப்பயணம்

பெங்களுரில் பிறந்து வளர்ந்த நிதிஅகர்வால், இந்தி பேசும் மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 2017ம் ஆண்டு முன்னா மைகேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதையடுத்து, சவ்யாசாசி என்ற தெலுங்கு படத்தில் என்ட்ரி கொடுத்து ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

சிம்புவுடன்

சிம்புவுடன்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஈஸ்வரன் திரைப்படமும் ஜெயம் ரவியுடன் நடித்த பூமி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானது. ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற மாங்கல்யம் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் அளவுக்கு பிரபலமானார் நிதி அகர்வால்.

உதயநிதி ஸ்டாலினுடன்

உதயநிதி ஸ்டாலினுடன்

நிதிஅகர்வால் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் ஹரி ஹர வீர மல்லு என்ற தெலுங்கு படத்திலும், ஹீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Recommended Video

EESWARAN MOVIE TEAM SPEECH | EESWARAN AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL
பட வாய்ப்புக்காக இப்படியா

பட வாய்ப்புக்காக இப்படியா

சினிமாவில் பிஸியாக நடித்தாலும் இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார். தற்போது, பிளாக் அண்ட் பிளாக்கில் குட்டி டவுசரை போட்டுக்கொண்டு மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்தாலும், பலரை இது முகம் சுளிக்க வைத்து பட வாய்ப்புக்காக இப்படியா என பேச வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X