பிரபல நடிகைக்கு திருமணம்..டைட்டாக அணைத்தபடி மாப்பிள்ளை போட்டோவை வெளியிட்டார்.. முகத்தை காட்டலையே!
சென்னை: அந்த பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு திருமணம் என்பது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது.
Recommended Video
விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நிஹரிகா கொனிடெலா.
இவர், தெலுங்கு சினிமாவின் பெரிய குடும்பமான, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள்.

நாகபாபு மகள்
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாகபாபு, தமிழில், வேட்டை, விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவர் மகள் நிஹரிகா, நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர், நிஹரிகா.

அசோக் செல்வன்
அடுத்து ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நன்னா கூச்சி, மேட் ஹவுஸ் ஆகிய வெப்சீரிஸ்களையும் தயாரித்து நடித்துள்ள நிஹரிகா, இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார்.

சரியான நபரை
ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. நடிகை நிஹரிகாவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக வதந்திகள் வெளியாயின. இந்நிலையில் நிஹரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக அவர் தந்தை நாகபாபு தெரிவித்திருந்தார். அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திருமணம் செய்ய இருப்பதாகக் கூறியிருந்தார்.

மாப்பிள்ளை
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று முன் தினம் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் நடிகை நிஹரிகா. அதில், ஒரு காஃபி கப்பில், மிஸ் என்பதை அடித்துவிட்டு மிசஸ்? என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் தனது திருமணம் பற்றிதான் அவர் இப்படி கூறியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

நிச்சயதார்த்தம்
இதையடுத்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாகவும் மணமகன் குண்டூரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவர் யார் என்கிற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் தனது திருமணம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் துண்டு துண்டாக வெளிப்படுத்தி வருகிறார் நிஹரிகா.

கட்டிப்பிடித்தபடி
இப்போது வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் முகத்தை அதில் காண்பிக்கவில்லை. ஒருவேளை இன்று தெரிவிப்பாரோ என்னவோ? இதற்கு நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ரசிகர்கள், யார் அந்த அதிர்ஷ்டசாலி என்றும் முகத்தைக் காட்டுங்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











