கடற்கரையில் சாவகாசமாக காற்று வாங்கும் நடிகை நிக்கி கல்ராணி!
சென்னை : இயக்குனருமான நடிகருமான சசிகுமாருடன் இணைந்து ராஜ வம்சம் படத்தில் நடித்து வருகிறார் நடிகை நிக்கி கல்ராணி.
நடிகர் ஆதியும் இவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் காதும் காதும் வைத்தவாறு பரவிக் கொண்டு வரும்பொழுது மூன்றாம் முறையாக இருவரும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
தென்காசிக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் ராம் பாலாவுடன் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் மறக்கமுடியாத தருணம் என கூறி வந்த நிக்கி கல்ராணி தற்போது கடற்கரையில் சாவகாசமாக காற்று வாங்கியவாறு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெற்றி பெற்றது
ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் டார்லிங் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்ததோடு படமும் வெற்றி பெற்றது.

மூன்றாம் முறையாக
யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் என ஆதி நடித்த இரண்டு திரைப்படங்களில் ஏற்கனவே ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணி இப்பொழுது மூன்றாம் முறையாக சுசீந்திரன் இயக்கும் சிவுடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிவுடு போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையதளத்தை தெறிக்க விட்டது. நடிகை கீர்த்தி சுரேஷும் சிவுடு போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இருவரும் காதலிப்பதாக
ஆதியும் நிக்கி கல்ராணியின் காதலிப்பதாக ஏற்கனவே டாக் வலம் வந்து கொண்டிருக்க இப்பொழுது தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இணைந்து படங்களில் நடிப்பதால் கிசுகிசு ஒருவேளை உண்மையாக இருக்குமோ என ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. மேலும் ஆதியின் அப்பாவின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று குடும்பத்தோடு குடும்பமாக நிக்கி கல்ராணி செலிப்ரேட் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜில்லுன்னு ஒரு போட்டோ ஷூட்
சசிகுமாரின் ராஜ வம்சம் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் வட்டம் என அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு வெளியாக இருக்க இப்பொழுது கடற்கரையில் சாவகாசமாக காற்று வாங்கியவாறு ஜில்லுன்னு ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இணையதளத்தை தெறிக்க விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











