வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் பணம் பறித்த மர்ம நபர்கள்.. பீரோவுக்குள் ஒளிந்துகொண்ட பிரபல நடிகை!

மும்பை: பிரபல நடிகையிடம் துப்பாக்கி முனையில் 7 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவல். 2007ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் ஹாட் மிஸ்டர் கூல் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பிளாக் அன்ட் வொய்ட், தி ஹீரோ அபிமன்யு, அம்மனா கி போலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார் நிகிதா ராவல்.

முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளை

முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளை

பாலிவுட் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை நிகிதா ராவல். இந்நிலையில் நடிகை நிகிதா ராவலிடம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நிகிதா ராவல் டெல்லி ஷாஸ்த்திரி நகரில் உள்ள தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார்.

துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை

துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை

அந்த வீட்டில்தான் மர்ம நபர்கள் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி 7 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக நிகிதா ராவல் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "என்னால் இன்னும் இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட முடியவில்லை, நான் உயிருடன் இருக்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.

பீரோவுக்குள் சென்று ஒளிந்து கொண்டேன்

பீரோவுக்குள் சென்று ஒளிந்து கொண்டேன்

நான் போராடவில்லை என்றால் நான் இறந்திருப்பேன். நான் உண்மையில் என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பீரோவுக்குள் சென்று ஒளிந்து கொண்டேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன். என் சித்தியும் அப்போது வீட்டில் இல்லை. இது என் வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் என மிரட்சியுடன் கூறியுள்ளார் நிகிதா ராவல்.

இரவு 10 மணி ஆகிவிட்டது

இரவு 10 மணி ஆகிவிட்டது

இந்த பயங்கர சம்பவத்திற்குப் பிறகு, நிகிதா ராவல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து மேலும் அவர் பேசியிருப்பதாவது, இந்த சம்பவம் நடந்தபோது இரவு 10 மணி ஆகிவிட்டது. நான் என் சித்தியின் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு இன்னோவா கார் மிக வேகமாக வந்து என் வாகனத்தை நிறுத்தியது.

முகமூடி அணிந்த 4 பேர்

முகமூடி அணிந்த 4 பேர்

பின்னர் முகமூடி அணிந்த நான்கு பேர் காரிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் என்னிடம் துப்பாக்கியைக் காட்டி, என்னுடன் எடுத்துச் செல்லும் அனைத்தையும் தங்களுக்குத் தரும்படி என்னிடம் கேட்டார்கள். சம்பவத்தைப் பற்றி பேசுவது கூட இப்போது என்னை தொந்தரவு செய்கிறது. அந்த நேரத்தில், அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்தேன்.

பலாத்காரம் செய்துவிடுவார்கள் என்று பயந்தேன்

பலாத்காரம் செய்துவிடுவார்கள் என்று பயந்தேன்

என் உடமைகள் அனைத்தையும் எடுத்துச் சென்றாலும், அவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்களோ என்று பயந்தேன். அந்த 10 நிமிடங்களில் நான் சந்தித்ததை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் என் இடத்திற்கு வேகமாக வந்து வீட்டை பூட்டிக் கொண்டேன். அங்கு நான் பாதுகாப்பாக இல்லை என்பதால் மறுநாள் காலையில் நான் மும்பைக்கு திரும்பினேன்.

எஃப் ஐ ஆர் பதிவு செய்ய

எஃப் ஐ ஆர் பதிவு செய்ய

நான் முறையான புகார் கொடுக்கக் கூட காத்திருக்கவில்லை. மும்பைக்கு வந்த பிறகு புகார் அளிக்க ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொண்டேன். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நான் இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆகையால் நான் விரைவில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளேன் என நிகிதா ராவல் கூறியுள்ளார்.


நிகிதா ராவலின் மோதிரங்கள், கைக்கடிகாரம், காதணி, வைர பதக்கம் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன.

7 லட்சம் ரூபாய் மதிப்பு

7 லட்சம் ரூபாய் மதிப்பு

பணம் மற்றும் நகைகள் என மொத்தம் 7 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் பறித்து செல்லப்பட்டுள்ளது. நிகிதா ராவல் ராஜ் குந்த்ராவின் கைது குறித்து பேசியதால் டாக் ஆஃப் த டவுன் ஆனார். ராஜ் குந்த்ரா கைது குறித்து பேசிய அவர் தனக்கு ராஜ் குந்த்ராவை பொதுவான நண்பர்கள் மூலம் தெரியும் என்றார். கடந்த காலத்தில் தான் அவரை 3-4 முறை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.

குற்றவாளி என்றால் தண்டிக்கப்படுவார்

குற்றவாளி என்றால் தண்டிக்கப்படுவார்

மேலும் பார்ன் ராக்கெட் விவகாரத்தில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கூறிய நிகிதா ராவல் மும்பை காவல்துறையால் வெளியிடப்பட்ட அவரது வாட்ஸ்அப் உரையாடல்களை பார்த்தேன். அவர் ஆபாச படம் தயாரித்து இருந்தார் என்றால், அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் வாழ்க்கையில் எல்லாம் இருக்கிறது. இவை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் குற்றவாளி என்றால், அவர் தண்டிக்கப்படுவார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X