For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  '4 வருஷத்துக்கு முன்னால பிகினிக்கான உடல்வாகு என்கிட்ட இல்லைன்னு சொன்னாங்க..' பிரபல நடிகை கவலை!

  By
  |

  சென்னை: தனக்கு பிகினிக்கான உடல் அழகு இல்லை என்று பலர் கூறியதாக பிரபல நடிகை வருத்தப்பட்டுள்ளார்.

  பல நடிகைகளின் செல்லமான சிநேகிதி ஆகி இருக்கிறது சமூக வலைத்தளங்கள். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது லாக்டவுன்.

  பலரது வாழ்வை குதறிப்போட்டிருக்கிறது கொரோனா. லாக்டவுனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில், ஏராளமானோர் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது.

  ஃபேஸ் ஆப்பா அக்கா.. க்யூட்டான போட்டோவை போட்ட பிகில் தென்றல்.. பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!

  நடிகர், நடிகைகள்

  நடிகர், நடிகைகள்

  அவர்களின் பொருளாதாரம் சின்னாபின்னமாகி இருக்கிறது. பணமின்றி அவதிப்படும் அவலத்தை எங்கும் கேட்க முடிகிறது. இருந்தாலும் யாரோ, எங்கோ உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் உதவி வருகின்றனர். இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

  இன்ஸ்டாகிராம்

  இன்ஸ்டாகிராம்

  இதற்கிடையே, பல நடிகைகள் இந்த லாக்டவுன் பொழுதை இன்ஸ்டாகிராமில் கழிக்கிறார்கள் இன்பமாக. தங்களது புகைப்படங்களை தினமும் ஒன்றென பதிவிடுகிறார்கள், தினுசு தினுசாக. அதற்கு கிடைக்கும் கமென்ட்களும் லைக்ஸ்களும் அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கின்றன. அந்த மகிழ்ச்சி வேண்டும் அவர்களுக்கு. அந்த தீராதப் போதையில் சுகமாக மூழ்கிக் கிடக்கிறார்கள்.

  நடிகை நிகிதா சர்மா

  நடிகை நிகிதா சர்மா

  அப்படி அடிக்கடி புகைப்படங்கள் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் நிகிதா சர்மா. இந்தி சீரியல்கள் பலவற்றில் இவரை பார்த்திருக்க முடியும். கலர்ஸ் டிவியில் வெளியான மகாகாளி என்ற பக்தி தொடரில் லட்சுமிதேவியாக பக்தி மணம் கமழ நடித்திருக்கிறார், நிகிதா.பல்வேறு அழகிப் போட்டிகளில் வென்றுள்ள நிகிதா, டெல்லியைச் சேர்ந்தவர். இவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகின்றன.

  பிகினி விளக்கம்

  பிகினி விளக்கம்

  பிகினி புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ள அவர் நீண்ட 'பிகினி விளக்கம்' கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: 'உனக்கு பிகினி-க்கான உடலே இல்லை. அதுக்கு ஸ்லிம்மா இருக்கணும்' என்றார்கள், கடந்த 4 வருடத்துக்கு முன். அப்போது ஒல்லியாகும் முயற்சியின்போது எடுக்கப்பட்டதுதான் இந்த பிகினி போட்டோ. இந்தப் படத்தில் இருப்பதை விட சிறியவளாகவும் இருந்தேன்.

  தாழ்வு மனப்பான்மை

  தாழ்வு மனப்பான்மை

  என் உடல் பற்றி அவர்கள் பேசியது, என் ஆழ்மனதின் குரலை விட சக்தி வாய்ந்ததாக மாறியது. நான் அதை அனுமதித்தேன். என் தொடைகள் பிகினியில் குண்டாக இருப்பதாகவும் எனது பின்பக்கம் பெரிதாக இருப்பதாகவும் சொல்லப்படுவது அவமானகரமானது. சில வருடங்களுக்கு பிறகு என் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மையை எதிர்த்து போராடியதில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். என்னுடல் என்பது எனக்கானது. மற்றவர்கள் சொல்ல என்ன இருக்கிறது?

  பொருத்தமானவை

  பொருத்தமானவை

  அதன் பிறகு முதன்முறையாக நான் பிகினி அணிந்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது எனக்கு வசதியாகவே இருந்தது. இப்போது நான் உடல் எடை அதிகரித்திருந்தாலும் அப்போது பிகினி உடை அணிவதை விரும்பினேன். பிறகு எனக்குத் தெரிந்தவர்களிடம் சொன்னேன், பிகினிக்கு எல்லா உடல்களுமே பொருத்தமானவை என்று' எனக் கூறியுள்ளார் நிகிதா.

  கண்டுக்காதீங்க

  கண்டுக்காதீங்க

  இதற்கு பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர், ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க. நீங்க அதை கண்டுக்காதீங்க' என்று கூறியுள்ளனர். 'பலருக்கு விமர்சனம் செய்ய மட்டும்தான் தெரியும். அதற்கு காது கொடுத்துக்கொண்டிருந்தால் நாம் வாழவே முடியாது. நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் என்று சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

  Couple Quarantine | Sayyeesha Cup cakes | Genelia | Mahat Prachi
  பிகினி போட்டோ

  பிகினி போட்டோ

  மக்களுக்கு நெகட்டிவான விஷயங்களை மட்டுமே பேசத் தெரியும். அவர்கள் அதிகமாக காயப்படுத்துவார்கள். அதை கண்டுகொள்ளக் கூடாது என்று சிலர் கூறியுள்ளனர். ஒருவர், இந்த பிகினியில அழகா இருக்கீங்க. நிறைய பிகினி போட்டோ போடுங்க என்று கூறியுள்ளார். பலர் அவரது விளக்கத்தை பாராட்டியுள்ளனர்.

  English summary
  Actress nikita sharma's bikini stills goes viral
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X