என் காதலர் சென்னையில்தான் இருக்கிறார்.. அவருடன்தான் திருமணம்.. திடீரென அறிவித்த பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: நடிகை நிக்கி கல்ராணி தனது காதலர் சென்னையில் இருப்பதாகவும் அவரைதான் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை நிக்கி கல்ராணி கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். பெங்களூரில் படிப்பை முடித்த அவரை மலையாள சினிமாதான் முதலில் வரவேற்றது.
2014ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான 1983 படத்தில் அறிமுகமானார் நிக்கி கல்ராணி. முதல் படமே வசூலை குவித்தது. அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.

கன்னடம்
அடுத்தடுத்து மலையாள படங்களில் கமிட்டான அவரை கன்னட திரையுலகமும் வாரி அணைத்தது. தொடர்ந்து மலையாளம் கன்னடம் என பிஸியாக இருந்தார் நிக்கி கல்ராணி.

டார்லிங் படத்தில்..
தமிழ் சினிமா மட்டும் விட்டு வைக்குமா என்ன? டார்லின் என்ற ஹாரர் படத்தில் நிஷா கேரக்டரில் ஜிவி பிரகாஷுடன் ஜோடி சேர்ந்தார் நிக்கி. இந்த படம் வரவேற்பை பெற தொடர்ந்து தமிழ் படங்களிலும் பிஸியானார்.

பரபரப்பு பதில்
தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நிக்கி கல்ராணி, தனது திருமணம் குறித்த கேள்விக்கு பரபரப்பு பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.

சென்னையில் சந்தித்தேன்
அவர் கூறியிருப்பதாவது, நான் தற்போது காதல் உறவில் இருக்கிறேன். எனக்கு காதல் அனுபவம் உள்ளது. என்னுடைய காதலரை சென்னையில்தான் சந்தித்தேன். இருவரும் காதலித்து வருகிறோம்.

அவருடன்தான் திருமணம்
அவர் யார் என்று இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது நிச்சயம் சொல்கிறேன். அவரைதான் திருமணம் செய்துகொள்வேன். மூன்று வருடங்களுக்குப் பிறகு எங்கள் திருமணம் நடைபெறும் என நிக்கி கல்ராணி தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











