அடகடவுளே இப்படி எல்லாம் கூடவா நடக்கும்.. கட்டிலில் குப்புறப்படுத்து ஓணம் கொண்டாடிய நிக்கி கல்ராணி!
சென்னை: பிரபல நடிகை நிக்கி கல்ராணி படுக்கையில் குப்புற படுத்தபடி ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
தமிழ் தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆதி. இவர் தமிழில் அறிமுகமான மிருகம் படத்தில், மோசமான பெண் பித்தனாக நடித்திருந்தார்.

மிருகம் படத்தை தொடர்ந்து ஈரம்,அய்யனார், ஆடுபுலி ஆட்டம், அரவான் யாகவாயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம் ஆதி நடிப்பில் பார்ட்னர் திரைப்படம் வெளியானது.
நடிகை நிக்கி கல்ராணி: நடிகர் ஆதி நிக்கி கல்ராணியுடன் இணைந்து மரகத நாணயம், யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்ததிலிருந்தே காதல் வயப்பட்டனர். காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடிக்கு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் மே மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இணையத்தில் டிரெண்ட்: திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற இந்த ஜோடிகள் இணையத்தை தெறிக்கவிட்டனர். அதுமட்டுமில்லாவது 100வது திருமண நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கொண்டாடினார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

ஓணம் பண்டிகை: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிக்கி கல்ராணி,ஓணம் பண்டிகைக்கு, கேரளாவின் பாரம்பரிய புடவையை அணிந்து கொண்டு குப்புறப்படுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகாஸ், அடகடவுளே இப்படி எல்லாம் கூடவா பண்டிகையை கொண்டாடுவார்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











