தலையில் கர்சிப் கட்டிக்கொண்டு.. புது கெட்டப்பில் தோன்றிய நிக்கி கல்ராணி!

சென்னை : மலையாள சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை நிக்கி கல்ராணி

தமிழ் சினிமாவிற்கு டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் யாகாவராயினும் நாகாக்க, கோ 2,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு மொட்டசிவாகெட்டசிவா, மரகதநாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

இப்பொழுது இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இடியட் என்ற ஹாரர் படத்தில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து நடித்து வரும் நிக்கி கல்ராணி இப்பொழுது தலையில் கர்சிப் கட்டியவாறு தர லோக்கலுக்கு எடுத்த செம ஸ்டைலான புகைப்படங்கள் இப்போது இணையதளத்தில் வைரலாகிறது.

பாராட்டைப் பெற்றது

பாராட்டைப் பெற்றது

மலையாளத்தில் கடந்த 2014ல் வெளியான 1983 என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக திரைத்துறையில் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கு தமிழில் டார்லிங் திரைப்படம் அறிமுகப் படமாக அமைந்தது. இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படத்தில் நிக்கி கல்ராணி மிக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். டார்லிங் திரைப்படம் ஹிட்டடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

ஆதியுடன் ஜோடியாக மீண்டும் இணைந்து

ஆதியுடன் ஜோடியாக மீண்டும் இணைந்து

அதை தொடர்ந்து ஆதியுடன் இணைந்து யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணிக்கு தொடர்ந்து ஆதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தது அதன்படி மரகத நாணயம் படத்திலும் ஆதியுடன் ஜோடியாக மீண்டும் இணைந்து நடித்தார் இப்பொழுது சுசீந்திரன் இயக்கத்தில் சிவுடு என்ற படத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி 3-வது முறையாக இணைந்துள்ளது. மேலும் இந்த ரீல் ஜோடி இப்போது ரியல் ஜோடியாக மாறியுள்ளதாகவும் அவ்வப்போது கிசுகிசுக்கப்படுகிறது

காமெடி கலந்த ஹரர் படமாக

காமெடி கலந்த ஹரர் படமாக

சந்தானத்தின் தில்லுக்குதுட்டு மற்றும் தில்லுக்குதுட்டு பாகம் 2 படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் கலகலப்பான காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகி வருகிறது இடியட். மிர்ச்சி சிவா, மற்றும் நிக்கி கல்ராணி என இருவரும் பேயுடன் இணைந்து அடிக்கும் லூட்டியை இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக உள்ள இப் படத்தின் ரிலீசுக்காக நிக்கி கல்ராணி நீண்ட காலமாக காத்துக் கொண்டுள்ளார்.

Recommended Video

Sasikumar மாதிரி ஒரு நல்லவர பாத்ததே இல்ல |Actor Sathish , Nikki Galrani| Rajavamsam |Filmibeat Tamil
தலையில் ஸ்டைலான கர்சிப்

தலையில் ஸ்டைலான கர்சிப்

சமூக வலைதளங்களில் நிக்கி கல்ராணியை பின்பற்றுவோrinர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போக இவரின் ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது இந்த நிலையில் நிக்கி கல்ராணி தலையில் கர்சிப் ஒன்றை ஸ்டைலாக கட்டிக்கொண்டு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள தர லோக்கல் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X