Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு... ட்ரெடிஷனலில் தெறிக்கவிடும் நிக்கி கல்ராணி!
சென்னை: தென்னிந்திய அளவில் மிக பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை நிக்கி கல்ராணி
இப்பொழுது மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா?
அடிக்கடி ஃபோட்டோ ஷூட்களின் மூலம் இணையதளத்தை தெறிக்கவிடும் நிக்கி கல்ராணி இப்பொழுது சேலையில் அம்சமாக உள்ள அழகிய டிரெடிஷனல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

டார்லிங்
இசையமைப்பாளராக இருந்து இப்பொழுது வெற்றிகரமாக ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான டார்லிங் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை நிக்கி கல்ராணி. இதற்கு முன்பாகவே மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் டார்லிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகப் படமாக அமைந்தது படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை கண்டது

அளவான கவர்ச்சி
டார்லிங் வெற்றியை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம்,நெருப்புடா,ஹர ஹர மகாதேவகி, கலகலப்பு-2, பக்கா, சார்லி சாப்ளின் 2,தேவ், கீ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளார். நடிப்பு நடனம் என அனைத்து திறமைகளையும் கொண்ட நிக்கி கல்ராணி அளவான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்டார்லிங் வெற்றியை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவாகெட்டசிவா, மரகத நாணயம்,நெருப்புடா,ஹர ஹர மகாதேவகி, கலகலப்பு-2, பக்கா, சார்லி சாப்ளின் 2,தேவ், கீ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளார். நடிப்பு நடனம் என அனைத்து திறமைகளையும் கொண்ட நிக்கி கல்ராணி அளவான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

இருவரும் காதலித்து வருவதாக
யாகாவாராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ஆதிக்கு ஜோடியாக மூன்றாவது முறையாக சிவுடு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் இருவரும் மரகதநாணயம் படத்தில் நடிக்கும்போது காதல் வயப்பட்டதாகவும் தற்போது இருவரும் காதலித்து வருவதாகவும் திரைத்துறையில் கிசுகிசுக்கப்படுகிறது. இப்பொழுது இருவரும் இணைந்து சிவுடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

சேலையில் அம்சமாக
தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ராம்பாலா அடுத்ததாக இடியட் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஹாரர் கலந்த வித்தியாசமான காமெடி கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்து வர கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி திரைப்படமாக இடியட் மிக விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நிக்கிகல்ராணி. அந்த வகையில் இப்பொழுது சேலையில் அம்சமாக உள்ள புகைப்படங்களை பதிவிட்டதைப் பார்த்த ரசிகர்கள் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என வர்ணிக்கின்றனர்.