40 வயதில் திருமணத்துக்கு ரெடியான எஸ்.ஜே.சூர்யா பட நாயகி நிலா.. குவியும் வாழ்த்து

சென்னை: நடிகை நிலா தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இவர் பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 40 வயதாகும் அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பாலிவுட் நடிகைகள் ப்ரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோரின் உறவினர் மீரா சோப்ரா. இவர் தமிழில் நிலா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமானார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அன்பே ஆருயிரே படம்தான் நிலாவுக்கு முதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nila Will Married At Coming March Month

வாய்ப்புகள்: முதல் படத்தின் டீசண்ட்டான வரவேற்புக்குப் பிறகு நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் சில அமைந்தன. அப்படி அவர் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மருதமலை படம் மட்டுமே ஓரளவு ஓடியது. அதுவும் வடிவேலுவின் காமெடியால் மருதமலை படம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது வடிவேலுதான்.

கடைசி படம்: தமிழில் நடித்துக்கொண்டிருந்தபோது தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தார் நிலா. அதனையடுத்து பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. சூழல் இப்படி இருக்க எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கிய படமான இசை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அவர் கடைசியாக கில்லாடி படத்தில் நடித்தார். பிறகு தமிழில் நடிக்கவில்லை.

தற்போதைய படங்கள்: அவர் கடைசியாக சேபட் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமானது ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இவை தவிரவும் வேறு சில படங்களிலும் நடித்துவருகிறார். இதனால் மீண்டும் பிஸியாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். 40 வயதாகும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். தற்போது அவரது திருமணம் குறித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

நிலாவுக்கு திருமணம்: இதற்கிடையே பட வாய்ப்பு பெரிதாக எதுவும் இல்லாததால் தனது தந்தையின் தொழிலை கவனித்து வந்தார் அவர். பிரியங்கா சோப்ரா, பரிணிதி சோப்ராவின் உறவினர் என்பதால் அவர்கள் மூலம் பட வாய்ப்புகளை பெற நிலா முயற்சிக்கலாமே என்று சிலர் பேச ஆரம்பித்தனர். இதனை கவனித்த நிலா, எனக்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை. அதனை நான் விரும்பமாட்டேன். அவர்களும் அதை விரும்பமாட்டார்கள் என்று நச் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது திருமணம் பற்றி அறிவித்திருக்கிறார். அதன்படி வரும் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நிலாவின் திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்துவருகின்றன. நிலா தனது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டாலும் யாரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஆனால் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X