Nimisha Sajayan: மாமதுர பாட்டுக்கு ஆட்டம் போட்ட மலையரசி.. என்ன குத்து குத்தறாங்க!

சென்னை: ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஜிகர்தண்டா XX.

இந்தப் படத்தில் மலையரசி என்ற கேரக்டரில் ராகவா லாரன்சின் மனைவியாகவும் நிறைமாத கர்ப்பிணியாகவும் நடித்து கவனம் பெற்றிருந்தார் நிமிஷா சஜயன்.

Actress Nimisha Sajayan dance for the Maamadura annakodi song in Jigarthanda XX movie

இந்தப் படத்தின்மூலம் தமிழில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

ஜிகர்தண்டா XX படம்: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசான படம் ஜிகர்தண்டா XX. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக வெளியானது. முதல் பாகத்தில் எடுத்துக் கொண்ட தீமை மட்டும் இந்தப் படத்தில் கதைக்கருவாக எடுத்து வித்தியாசமான கதையை கொடுத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: இந்தப் படத்திலும் கேங்ஸ்டராக இருக்கும் ராகவா லாரன்ஸ், எப்படி சினிமாவின் நடிக்கும் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதையே கதைக்களமாக கொண்டிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதில் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் காட்டிற்கு முக்கியமான விலங்காக யானை எப்படி விளங்குகிறது என்பது குறித்த விஷயங்களையும் சிறப்பாக இணைத்திருந்தார். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

நிமிஷாவின் மலையரசி கேரக்டர்: படத்தில் ராகவா லாரன்சின் மனைவியாக மலையரசி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் நிமிஷா சஜயன். மலையாளத்தில் அதிகமாக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள இவர், இந்தப் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அழுத்தமான தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் நிமிஷா. படத்தில் நிறைமாத கர்ப்பிணியாகவும் தன்னுடைய கணவனின் ஆரம்பகால நடவடிக்கைகள் பிடிக்காதவராகவும் இவர் நடித்திருந்தார்.

Actress Nimisha Sajayan dance for the Maamadura annakodi song in Jigarthanda XX movie

நிமிஷா குத்தாட்டம்: படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக படத்தில் மாமதுர அன்னக்கொடி பாடல் அனைத்து தரப்பினரையும் குத்தாட்டம் போட செய்துள்ளது. இந்தப் பாடலின் ரீல்சை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது படத்தின் நாயகி நிமிஷா சஜயனே இந்தப் பாடலுக்கு மாடர்ன் ட்ரெஸ்ஸில் குத்தாட்டம் போட்டுள்ளார். அட என்ன இந்த குத்து குத்துகிறார் என்று ரசிகர்கள் இவரது நடனத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறப்பான ஆட்டம்: படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்துள்ளார் நிமிஷா சஜயன். படத்தில் டூயட் போன்ற அம்சங்களுக்கு இடமில்லாவிட்டாலும் க்ளைமேக்சில் சில காட்சிகளில் ஆடுவதாக அமைந்தது. இந்நிலையில் தன்னுடைய டான்ஸ் டேலண்டை வெளிக்காட்டும்வகையில் நிமிஷா தனியாக மாமதுர பாடலுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த ஆட்டத்தை பார்க்கும்போது இவ்வளவு சிறப்பாக இவர் ஆடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X