ராம்கி தான் என் உலகம்.. அவர நல்லா பார்த்துக்கணும்.. மனம் திறந்த நிரோஷா!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த ராம்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் நடிகை நிரோஷா. ஆரம்பத்தில் குடும்பத்தினர் அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்காத நிலையில், திருமணம் செய்துக் கொள்ளாமல் இருவரும் சேர்ந்து வந்து பின் திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை நிரோஷா தனது கணவர் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்
நடிகை எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா மற்றும் நிரோஷா, ராதாரவி என எல்லோரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்கள். இதில் ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானார். அதே போல, நிரோஷா, தாலி பொண்ணுக்கு வேலி என்ற படத்தில் படத்தில் அறிமுகம் ஆனார். அப்பாவுடன் 3 வயது குழந்தை யாக நடித்திருப்பார் நிரோஷா. மேலும், 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிரோஷா, நடிப்பில் மட்டுமில்லாமல், படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்திருக்கிறார்.

நடிகை நிரோஷா: இயக்குனர் மணிரத்தினம் தான் முதன்முதலாக ராதிகாவிடம் பேசி அவருடைய தங்கை நிரோஷாவை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளார். நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷா சர்ச்சையில் சிக்கினார். அதாவது அந்த படத்தில் அதிகப்படியான முத்தக்காட்சிகள், நெருக்கமான காட்சிகளில் நடித்தது தான் சர்ச்சைக்கு காரணம்.
வம்பு இழுக்கும் ராம்கி: நடிகை நிரோஷாக ராம்கியுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காமினேஷன் தமிழ் ஆடியன்சுக்கு மிகவும் பிடித்தாமான ஒன்றாக இருந்தது. ரசிகர்களுக்கு இந்த ஜோடியை பிடித்து இருந்தாலும், இருவரும், நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தாலும், அவர்களுக்குள் ஒத்துப் போகாமல் படப்பிடிப்பில் அடிக்கடி சண்டை வருமாம், அதிலும் குறிப்பாக ராம்கி எப்போதும் நிரோஷா உடன் வம்பிழுப்பதை வழக்கமாக கொண்டிருப்பாராம், நாளடைவில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பல ஜோடிகளுக்கு முன் உதாரணமாக உள்ளனர்.
ராம்கி தான் உலகம்: தற்போது நிரோஷா லால் சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனிடையே, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த போது கல்யாணம் ஆகி செட்டில் ஆகவேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்ததால் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ராம்கி தான் என் உலகம், திருமணத்திற்கு பிறகு எதுக்கு நடிக்கணும், வீட்டை பாத்துக்கிட்டு இருந்துவிடலாம் என்று நினைத்தேன் என்றார்.

மீண்டும் பிஸி: நடிகை நிரோஷா, பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் முடிவுக்கு வந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் லீடு ரோலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.சன் டிவியில் வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா, சந்திரகுமாரி, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











