Nirosho: “எவர்கிரீன் பியூட்டி” இளம் நடிகைகளை மிஞ்சும் நிரோஷா!

சென்னை: அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிரோஷா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர். 80 கால கட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

நடிகை நிரோஷா: எம் ஆர் ராதாவின் மகளும், நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையுமான நிரோஷா, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். ராம்கியுடன் பல படத்தில் ஜோடி போட்டு நடிக்க இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் ராம்கிக்கும் நிரோஷவிற்கும் ஒத்துப்போகாதாம், இருவரும் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் எலியும் பூனையுமாக இருப்பார்களாம். ஆனால், 'செந்தூரப்பூவே' படப்பிடிப்பின் போது நடிகை நிரோஷா விபத்தில் சிக்கி இருக்கிறார். அப்போது நடிகர் ராம்கி தான் அவரை காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு தான் இருவரும் நண்பர்களாகி, பின் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Actress Nirosha photo
Photo Credit:

எவர் கிரீன் பியூட்டி: திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் தலைகாட்டாமல் இருந்த நிரோஷா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இரண்டாவது பாகத்தில் 3 ஆண் பிள்ளைகளின் அம்மாவாக கோமதி என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். திரைப்படங்களில் கூட இவருக்கு கிடைக்காத வரவேற்பும், பாராட்டுகளும் நிரோஷாவுக்கு கோமதி கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது. இளம் நடிகைகள் போல இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிரோஷா, மெல்லிய, எளிமையான சேலையில், கையில் ஒரு வெள்ளை ரோஜாவை பிடித்தபடி நிரோஷா போஸ் கொடுத்திருக்கும் அந்த போட்டோ, பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்துள்ளது. முகத்தில் மென்மையான புன்னகை, கண்களில் ஒளிந்திருக்கும் அழகு அனைத்தும் சேர்ந்து அந்த புகைப்படத்திற்கு ஒரு கிளாசிக்கல் எலிகன்ஸ் கொடுக்கிறது. அதிக அலங்காரமின்றி, இயல்பான அழகை வெளிப்படுத்தும் இந்த லுக், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன. "எவர்கிரீன் பியூட்டி" என ரசிகர்கள் நிரோஷாவை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X