அன்னைக்கு அக்கா, இன்னைக்கு தங்கச்சி... மாலத்தீவில் பிகினியுடன் சூரிய குளியல் போட்ட நிஷா
சென்னை: நடிகை நிஷா அகர்வால் தனது சகோதரி காஜல் அகர்வாலுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.
அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இதில் வயதான கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஜாலி டிரிப்
மும்பை சாகா என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையே, படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த கேப்பில், குடும்பத்துடன் ஜாலியாக மாலத்தீவுக்குச் சென்றுள்ளார் காஜல். அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிஷா அகர்வால்
அதில், அவரது அப்பா வினய், அம்மா சுமன், தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் இருந்தனர். நிஷா, தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

பிகினி படங்கள்
இதையடுத்து பிகினி படங்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார் காஜல் அகர்வால். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. இந்நிலையில் நடிகை நிஷா தன் பங்குக்கு சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramOnly love and laughter ❤️ #Maldives #throwback
A post shared by Nisha Aggarwal (@nishaaggarwal) on
நிஷாவும்...
அதில் ஒரு படத்தில் அவரும் பிகினி உடையில் படுத்திருக்கிறார். அருகில் லவ் என்று எழுதப்பட்டிருக்கிறது. மற்ற புகைப்படங்களில் காஜல் அகர்வாலுடன் அவர் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











