கையில் வெளிநாட்டு சரக்கு... விளம்பரம் செய்த நிதி அகர்வால்… திட்டிதீர்த்த நெட்டிசன்ஸ்!
சென்னை : சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் திரைப்படங்களில் நடிப்பதோடு விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Recommended Video
அந்த வகையில் நடிகை நிதி அகர்வால் மதுபான விளம்பரத்தில் நடித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு கம்பெனியின் மதுவை அவர் அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் அந்த மதுபானத்தை எப்படி குடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.

விளம்பர மோகம்
ஒரு திரைப்படத்தில் மாதக்கணக்கில் நடிப்பதை விட ஒரே நாளில் முடியும் விளம்பரத்தில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விளம்பரத்தில் நடிப்பதால் சம்பளமும் அதிகம், திரைப்படங்களை விட அதிக அளவில் பிரபலமாகிவிடலாம் என்பதால் நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர் விளம்பரங்களில் நடிப்பதை விரும்புகின்றனர்.

மதுபான விளம்பரங்களில்
என்னத்தான் ஏராளமான பணம் கொடுத்தாலும், எந்த விளம்பரத்தில் நடிப்பது என்பதில் ஒரு வரை முறைவேண்டாமா. சமீபகாலமாக ராய் லக்ஷ்மி, பூஜா ஹெக்டே, ஹன்சிகா மோத்வானி, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் மதுபான விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தாலும் பல நடிகைகள் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

நிதி அகர்வாலுக்கு கண்டனம்
நடிகர் சிம்புவுடன் ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான நிதிஅகர்வால் ஒரு மதுபான விளம்பரத்தில் நடித்து அதை தனது சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்துள்ளார். அதில்,வெளிநாட்டு மதுபானத்தை கிளாசில் ஊற்றி அதன் வாசனை சிறப்பாக இருப்பதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த பலர் அவருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கண்டன குரல்கள்
சமூகவலைத்தளத்தை பெரும்பாலும் இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இது போன்ற விளம்பரங்களில் ஒரு முன்னணி நடிகை நடிப்பது ஒரு தவறான முன் உதாரணமாகிவிடும் என்று கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. மேலும், இந்த மதுவை அருந்துவதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி என்று கூறுவது, இளைஞர்களை மது அருந்த தூண்டும் வகையில் உள்ளது என்று பல கண்டனக் குரலகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











