எதிர்பார்ப்பை எகிற வைத்த தலைவன் தலைவி.. டப்பிங்கில் தெறிக்க விட்ட நித்யா மேனன்!
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் தலைவன் தலைவி. இதில், நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியான நிலையில், அதற்கு நித்யா மேனன் டப்பிங் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ள திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செம்பியன் வினோத், ரோசினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே. சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
தலைவன் தலைவி: இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியானது அதில், விஜய்சேதுபதி, கொத்து பரோட்டாவை கொத்திக்கொண்டு இருக்க நித்யா மேனன், இது தான் மகாராணி போல பாத்துக்கும் லட்சனமா என்று கேட்க, பிடிக்கவில்லை என்றால், உங்க அப்பாவின் அரண்மனைக்கு போடி என்று விஜய் சேதுபதி சொல்ல, இருவருக்குள்ளும் செல்ல சண்டை நடக்கிறது. இந்த டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசருக்கு கிடைத்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அந்த படத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

டப்பிங் பணி: இந்த டீசலில், விஜய் சேதுபதியைவிட, நித்யா மேனன் பட படவென்று, அழகாக பேசி இருப்பார். தற்போது, டைட்டில் டீசருக்கான நித்யா மேனன் டப்பிங் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் ஜூலை 18ம் தேதி தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் எடுபடவில்லை: அண்மையில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'ஏஸ்' திரைப்படம் தியேட்டரில் வெளியாகி படு மோசமான தோல்வித்திரைப்படமாக அமைந்தது. படத்தில் கதையே இல்லை என்று பலரும் படத்தை குறை கூறிய நிலையில், நடிகர் விஜய்சேதுபதி, பெரிய நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் படத்திற்கே ஒரு மாதத்திற்கும் மேலாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். இந்த படத்திற்கு நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து தான் ப்ரோமோஷன் பணி தொடங்கினோம். அது தான் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறியிருந்தார். இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்த இப்படத்தில், ருக்மிணி வசந்த், பப்லூ, அவினாஷ், யோகி பாபு, திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு மகாராஜா, விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இதில், மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும், வழக்கமாக பல நடிகர்களுக்கு 50 திரைப்படம் என்றால், அது சொதப்பிக்கொண்டு போய் விடும். ஆனால், மகாராஜா படம், விஜய்சேதுபதியின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக திரைப்படமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











