நயன்தாரா, சமந்தாவிற்கு போட்டியாக மாறிய நித்யா மேனன்.. குவியும் வாழ்த்து!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தான் நித்யா மேனன். இவர் தனுஷூடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் நித்யா மேனன். தற்போது இவர் நடிப்பை நாட்டி தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்து இருக்கும் இவர், புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
மலையாளத்தில் நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கி நித்யா மேனன் தமிழில், 180, மாலினி 22 பாளையங்கோட்டை, வெப்பம், இருமுகன், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம், தலைவன் தலைவி, காதலிக்க நேரமில்லை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக மீண்டும் தனுஷூடன் இணைந்து இட்லி கடை திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நித்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை நித்யா மேனன்: அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் நித்யா மேனன், இப்போது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 'கியூரி புரொடக் ஷன்' என்று பெயர் வைத்துள்ளார். மேலும், நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்து வருகிறது. இப்போது ஒரு தயாரிப்பாளராக மாறி இருக்கிறேன். நான் தயாரிக்கும் படங்கள் மூலம் பார்வையாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது குறிக்கோள என்று கூறியுள்ளார்.
தயாரிப்பு நிறுவனம்: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதே போல நடிகை சமந்தா, ட்ரலலா மூவிஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதே பாணியை கையில் எடுத்து இருக்கும் நித்யா மேனன் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதுமுக இயக்குநர்களுக்கும், சின்ன பட்ஜெட் படங்களுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











