Nithya menen: எனக்கு காதலிக்க இன்ட்ரஸ்ட் இல்லை.. என்ன நித்யா மேனன் இப்படி சொல்லிட்டாங்க!

சென்னை: நடிகை நித்யா மேனன் நடிப்பில் அடுத்ததாக காதலிக்க நேரமில்லை படம் வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவள்ளது. ஜெயம்ரவியுடன் நித்யா மேனன் இணைந்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி. ரெட் ஜெயண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அதிகமான படங்களில் இல்லாமல் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். முன்னதாக தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்த நித்யா மேனன் நடிப்பில அடுத்ததாக காதலிக்க நேரமில்லை படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக மீண்டும் தனுஷுடன் நித்யா மேனன் நடித்துள்ள இட்லி கடை படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறியுள்ளார்.

nithya menen kadhalikka neramillai movie jayam ravi

நடிகை நித்யா மேனன்: நடிகை நித்யா மேனன் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் கவனம் பெற்று வருகின்றன. தமிழில் முன்னதாக தனுஷுடன் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. நித்யாவிற்கு தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றுக் கொடுத்த நிலையில் வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக நித்யா மேனன் -ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படம் ரிலீசாகவுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

காதலிக்க விருப்பம் இல்லை: இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டுவரும் நித்யா மேனன், ஜெயம்ரவியுடன் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்துள்ள நித்யா மேனன், தனக்கு காதலிக்க இன்ட்ரஸ்ட் இல்லை என்று கூறியுள்ளார். தான் மெச்சூர்டானவளாக மாறியுள்ள நிலையில், தற்போதைய சூழலில் காதலுக்கு முக்கியத்துவம் தரும் மனநிலையில் தான் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு காதலில் சுத்தமாக விருப்பம் இல்லை என்றும் அவர் உறுதியுடன் பேசியுள்ளார்.

நடிக்க பிடிக்காது: மேலும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் நித்யா மேனன், தனக்கு பிடிக்காத துறை என்று ஒன்றை சுட்டிக் காட்டினால் அது திரைத்துறை தான் என்றும் கூறியுள்ளார். சிறு வயதிலேயே நடனமாடு, கேமரா முன்பு வந்து நடி என்றெல்லாம் தன்னுடைய அம்மா கூறுவார் என்றும் ஆனால் சினிமா என்றாலே தனக்கு பிடிக்காது என்றும் நித்யா மேனன் மேலும் கூறியுள்ளார். ஒரு சாதாரண வாழ்க்கையை வாழவே தான் விரும்புவதாகவும் தற்போதுகூட சினிமாவில் இருந்து விலகி வேறு துறையில் சேர்ந்து விடலாம் என்று தான் நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணத்தை மாற்றிய தேசிய விருது: பூங்காவில நடப்பது, உடற்பயிற்சிகள் செய்வது போன்ற சாதாரண வேலைகள் தனக்கு பிடிக்கும் என்றும் ஆனால் நடிகையாக இருப்பதால் சுதந்திரமாக இருப்பதை மறந்துவிட வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தன்னுடைய பெற்றோரிடம் கூறியதாகவும் அவர்களும் பிடித்ததை செய்யுமாறு கூறியதாகவும் ஆனால் அந்த நேரத்தில் தனக்கு தேசிய விருது கிடைத்ததாகவும் அதனால் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா நம்மை விடாது என்று தோன்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X