நெத்தியில் அழுத்தமான முத்தம்.. மற்றுமொரு அழகு .. நித்யா மேனனின் இன்ஸ்டா போஸ்ட் !

அசாத்தியமான நடிப்பு திறமையால் நம்மை மெர்சல் செய்து வருபவர் இந்த அழகு கண்மணி நடிகை நித்யா மேனன். மேலும் இவர் ஒரு பின்னணி பாடகியும் கூட தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இவர் தமிழில் ஓகே கண்மணி, மெர்சல் போன்ற படங்களுக்காகவும், தெலுங்கில் இஷ்க், அலா மொதலாயிந்தி போன்ற படங்களுக்கும் , மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல் போன்ற படங்களுக்கும் பெஸ்ட் அக்ட்ரஸ் விருது, மற்றும் பெஸ்ட் நியூ கம்மர் விருது போன்ற பல விருதுகளை தனது நடிப்பு திறமையால் வாரி குவித்துள்ளார்.

இவர் தமிழில் முதன் முதலில் 180 என்ற படத்தில் சித்தார்த் மற்றும் பிரியா ஆனந்த் உடன் நடித்திருப்பார். நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகையாக பரிந்துரைக்கப்பட்டவர். மேலும் இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலிஷ் என அனைத்து மொழிகளிலும் புகுந்து விளாசுவார்.

 உயிரூட்டும் காதல் காட்சிகள்

உயிரூட்டும் காதல் காட்சிகள்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் நித்ய மேனன் நடித்து வெளியான படம் ஓ காதல் கண்மணி. இதில் தற்போது உள்ள காலகட்டத்தில் இருக்கும் சில இளைஞர்களின் வாழ்க்கை முறையை பற்றி அதாவது லிவ்விங் டுகெதர் என்ற மைய கருவை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கி இருப்பார். இதில்ஆதி, தாரா காதல் காட்சிகள் அழகாக கதைக்கு உயிரூட்டி இருக்கும்.

 கச்சிதமான நடிப்பு

கச்சிதமான நடிப்பு

இதில் நடித்துள்ள துல்கர் சல்மான் "ஆதி" என்ற கதாபாத்திரத்திலும் நித்ய மேனன் தாரா என்ற கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார்கள். இந்த படம் வெளியான பொழுது கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் இளைஞர்களியே எப்போது ஒரு நீங்காத இடத்தை இப்படம் பெற்றது. ஓகே கண்மணியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.சி.ஸ்ரீராம். அவர் இந்த படம் மட்டுமல்ல மணிரத்னத்தின் அனைத்துப்படங்களிலும் இவர் தான் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளர்.

 நெற்றில் அழுத்தமான முத்தம்

நெற்றில் அழுத்தமான முத்தம்

அந்த படத்தில் யாரும் எதிர் பார்க்காத வகையில் கிளைமாக்ஸில் இருவரும் திருமணம் செய்து கொள்வது போல இருக்கும். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு " P.C ஸ்ரீராம் அவர்களின் காப்பகத்தில் இருந்து மற்றுமொரு அழகு" என குறிப்பிட்டு இருந்தார். ஆதி, தாராவின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்த அந்த காட்சியை லாவகமாக போட்டோ பிடித்து பல வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன் P.C ஸ்ரீராம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் அதை இப்போது நித்யா மேனன் மீண்டும் பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

 கூட்டணி மீண்டும் தொடருமா

கூட்டணி மீண்டும் தொடருமா

இதனை பார்த்த நித்யா மேனன் மற்றும் ஓ காதல் கண்மணி ரசிகர்கள் இந்த கூட்டணியை மீண்டும் பார்க்க வாய்ப்புள்ளதா என கேட்டுள்ளனர். மேலும், தமிழ் தெரியாத ரசிகர் ஒருவர். எனக்கு தமிழ் வசனங்கள் புரியாத போதும் இந்த படம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. இதில் உங்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது என இந்த படத்தின் மீது தனக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் அந்த வேற்று மொழி ரசிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X