Nithya menon: மழையில் கொண்டாட்டம்.. பாட்டுப்பாடி மகிழ்ச்சி போஸ்ட் போட்ட நித்யா மேனன்!
பெங்களூர்: நடிகை நித்யா மேனன் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான கன்னட மொழி படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். நடிப்பு ராட்சசி என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
தமிழில் அடுத்ததாக இவரது நடிப்பில் டியர் எக்ஸஸ் மற்றும் காதலிக்க நேரமில்லை நேரமில்லை படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க நித்யா மேனன் கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் நித்யா மேனன்.

நடிகை நித்யா மேனன்: நடிகை நித்யா மேனன் கடந்த 2006ம் ஆண்டில் கன்னட மொழி படத்தில் நடித்து ஹீரோயினாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் சிறப்பான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் கடைசியாக தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்ட நித்யா மேனன், தற்போது டியர் எக்ஸஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை காமினி என்ற அறிமுக இயக்குநர் இயக்கிவருகிறார். இதே போல கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து முடித்துள்ளார் நித்யா மேனன்.
பாட்டுப்பாடி கொண்டாட்டம்: இந்நிலையில் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஜூலை மாத மழையை கொண்டாடி ரசித்து பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார் நித்யா மேனன். இந்த பதிவிற்கான கேப்ஷனில் பெங்களூரில் ஜூலை மாதத்தில் அரிதாகத்தான் வீட்டில் இருப்பேன் என்றும் மரங்களுக்கு இடையிலும் பெங்களூரின் மேகங்களுக்கு மத்தியிலும் வீட்டில் இருப்பது மகிழ்ச்சியானது என்றும் கூறியுள்ளார். க்யூட்டான பாடல் ஒன்றையும் பாடி அசத்தியுள்ளார். கேஷுவல் லுக்கில் நித்யா மேனன் வெளியிட்டுள்ள இந்த பதிவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
படங்கள்.. வெப் தொடர்கள்: முன்னதாக நித்தியாமேனன் நடிப்பில் உருவான குமாரி ஸ்ரீமதி, மாஸ்டர் பீஸ் ஆகிய இணைத்தொடர்களும் மிகப் பெரிய அளவில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நித்யா மேனன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து முன்னதாக மலையாளத்தில் 19 (1) (a) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர் இந்நிலையில் இவர்கள் இருவரும் இரண்டாவதாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.
மீண்டும் தனுஷுடன் ஜோடி: இதனிடையே திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், நித்யா மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனிடையே, அடுத்ததாக தன்னிடம் தனுஷ் ஒரு கதையை சொன்னதாகவும் தனுஷே இயக்கவுள்ள அந்தப் படத்தில் தானும் நித்யா மேனனும் நடிக்கவுள்ளதாகவும் பிரகாஷ்ராஜ், ராயன் பட பிரமோஷனின்போது பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











