இதைவிட பெட்டர் ஸ்கிரிப்ட் கிடைச்சிருக்காது.. விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன் மகிழ்ச்சி!

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்துள்ளார் நித்யா மேனன். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் தனுசுடன் இணைந்து நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நித்யா மேனனின் அடுத்தடுத்த படங்கள் குறித்து எதிர்பார்ப்பு இருந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் நித்யா மேனன். விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் அவர். முன்னதாக இந்த ஜோடி மலையாளப்படம் ஒன்றில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathi nithya menon pandiraj

நடிகை நித்யா மேனன்: நடிகை நித்யா மேனன் தமிழில் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நித்யா மேனனின் நடிப்பு தமிழில் ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது. தனுஷுடன் கடந்த 2022ம் ஆண்டில் நித்யா மேனன் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்துள்ளார் நித்யா மேனன். இந்த படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றும் மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அடுத்ததாக விஜய் சேதுபதி உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி: எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர் பிரத்யேகமாக ட்ரெயினிங் எடுத்துள்ளாராம். இந்தப் படத்தின் சூட்டிங் நாளைய தினம் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், படம் குறித்து நித்யா மேனன் தன்னுடைய பேட்டி ஒன்றில் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

தனித்துவமான கதைக்களம்: இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் கதைக்களம் மிகவும் தனித்துவமாக அமைந்துள்ளதாகவும் இது போன்ற கதைக்களத்தில் முழுதாக தான் இதுவரை நடித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக மலையாள படம் ஒன்றில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தான் நடித்துள்ளதாகவும் ஆனால் அதில் தங்களுக்கு இடையிலான காம்பினேஷன் காட்சிகள் மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யா மேனன் நடிக்கவுள்ள இந்தப் படம் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

மாஸ் கூட்டணி: விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வசூலையும் குவித்துள்ளது. அடுத்ததாக அவர் ஏஸ், ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் நிலையில், பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி இணையவுள்ள இந்தப்படமும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. பசங்க உள்ளிட்ட படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இந்நிலையில் இந்தக் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X