Nithya menon: தனுஷ் இதை செய்ய சொன்னார்.. இட்லி கடை படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்த நித்யா மேனன்!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருவதுடன் தன்னை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைக்கும் பணியிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது இயக்கத்தில் பவர் பாண்டி படம் வெளியான நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படம் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ளது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம். இந்தப் படத்தை தொடர்ந்து இட்லி கடை படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் எப்போதுமே தன்னை சிறப்பான நடிகராக வெளிப்படுத்தி வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் தனுஷ், இதற்கெல்லாம் எப்படித்தான் டைமை மேனேஜ் செய்கிறாரோ என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சாதித்த தமிழனாகவே தனுஷ் கொண்டாடப்படுகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதுடன் இயக்கத்திலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியான ராயன் படம் மிகச்சிறப்பாக அமைந்தது.
ராயன் படம்: ராயன் படத்தில் லீட் கேரக்டரில் நடிக்கவும் செய்திருந்தார் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் காளிதாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இவர்களின் நடிப்பில் இந்தப் படத்தின் திரைக்கதையும் சிறப்பாக அமைந்த நிலையில் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. படத்தின் வெற்றிக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசையும் காரணமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தப்படத்தின் ரிலீசுக்கும் தயாராகியுள்ளார் தனுஷ். அவரது நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இட்லி கடை படம்: இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் அடுத்தப்படமான இட்லி கடை படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் அவருடன் நித்யா மேனன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த நிலையில் விரைவில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படம் குறித்து தனது பேட்டியொன்றில் பேசியுள்ள நடிகை நித்யா மேனன், இந்தப் படத்தில் தன் மீது அதிகமான நம்பிக்கை வைத்து தனுஷ் சிறப்பான கேரக்டரை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இட்லி கடை படத்தில் நித்யா மேனன்: இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டரில் காமெடி தூக்கலாக இருக்கும் என்றும் தன் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய கேரக்டரை தனுஷ் கொடுத்துள்ளதாகவும் தான் சிறப்பாக இந்த கேரக்டரை செய்வேன் என்று அவர் ஊக்குவித்ததாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் 52வது படமாக உருவாகிவருகிறது இட்லி கடை. இந்தப் படத்தில் முன்னதாக திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து சிறப்பான வெற்றியை கொடுத்த தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஜோடி இணைந்துள்ளது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











