Nithya menon: அதை பார்க்கவே மாட்டேன்.. என்னோட சந்தோஷத்துக்கு காரணம்.. நித்யா மேனன் பகிர்ந்த சீக்ரெட்

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்துள்ள நித்யா மேனன், கடந்த 2022ம் ஆண்டில் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

இந்தப் படத்தையடுத்து தனுஷ் -நித்யா மேனன் இடையில் மிகச்சிறப்பான நட்பு உருவாகியுள்ளது. தன்னுடைய கதைகள் குறித்து ஆலோசனை கேட்கும் அளவில் இவர்களின் நட்பு விரிவடைந்துள்ளது. இதனிடையே, திருச்சிற்றம்பல படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகிவரும் இட்லி கடை படத்திலும் நாயகியாக இணைந்துள்ளார் நித்யா மேனன்.

nithya menon itli kadai movie thiruchitrambalam


நடிகை நித்யா மேனன்: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை படத்திலும் வெயிட்டான கேரக்டரில் இணைந்துள்ளார். முன்னதாக இந்த கூட்டணி கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்திருந்தது. இந்த கூட்டணி ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்ததுடன் வசூலையும் வாரி குவித்தது. மேலும் இந்த படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.

நித்யா மேனன் சந்தோஷத்திற்கு காரணம்: அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வரும் நித்யா மேனன், தற்போது தனது பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்தும் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும், மகிழ்ச்சிக்கான சாவி உள்ளிட்ட பல விஷயங்களை பேசியுள்ளார். தான் டிவி பார்ப்பதில்லை, செய்திகள்கூட கேட்பதில்லை என்று கூறியுள்ள நித்யா மேனன், தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை என்றும் வம்புகளில் தன்னுடைய கவனம் செல்வதில்லை என்றும் பலவாறாக கூறியுள்ளார். அதனால்தான் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நித்யா மேனன் மேலும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.

தனுஷுடனான நட்பு: தொடர்ந்து சூட்டிங்கில் அதிகமாக கவனம் செலுத்துவதால், கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்படும் என்றும் தான் வீட்டில் இருந்தாலே ரிலாக்ஸ் ஆகிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இயற்கையுடன் நெருக்கமாக இருக்க முயற்சி செய்வேன் என்றும் தன்னுடைய உலகம் தனி என்றும் நித்யா மேனன் மேலும் கூறியுள்ளார். இதனிடையே நடிகர் தனுஷுடனான தனது நட்பு திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு மிகவும் நெருக்கமாக மாறியுள்ளதாகவும் தனுஷ் தான் நினைக்கும் விஷயங்களை நேரடியாக சொல்லிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் உள்ள கதைகளை டிஸ்கஸ் செய்து நித்யா மேனனின் அபிப்ராயத்தையும் தனுஷ் கேட்பார் என்றும் தன்னுடைய பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.


தேசிய விருதுடன் நித்யா மேனன்: தனுஷ் அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்க விரும்புவதாகவும் நித்யா மேனன் மேலும் குறிப்பிட்டுள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் நடித்திருந்த ஷோபனா கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்காக தான் பெற்ற தேசிய விருதுடன் தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நித்யா மேனன். முன்னதாக நித்யா மேனனுக்கு தேசிய விருது வாங்க தகுதியில்லை என்று சாய் பல்லவி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்த நிலையில், தற்போது விருதுடன்கூடிய தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X