முழுமதி அவளது முகமாகும்... பௌர்ணமியாய் பளிச்சிடும் நித்யா மேனன்!
சென்னை: நடிகை நித்யாமேனன் இப்பொழுது ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
சயின்டிஃபிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஸ்கைலாப் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்க இந்தப் படம் டிசம்பர் 4ஆம் தேதி திரையில் ரிலீசாக உள்ளது
மலையாளம், தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் பௌர்ணமியாய் பளிச்சிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஓகே கண்மணி
தென்னிந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முத்திரையை பதித்து வருகிறார். அந்த வகையில் ஓகே கண்மணி, மெர்சல், 24, இருமுகன், சைக்கோ போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு தனுஷ், இயக்குனர் ஜவஹர் கூட்டணியில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கில்
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. பவன் கல்யாண் மற்றும் ராணா இதில் நடித்தது வர இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். பீம்லா நாயக் அடுத்த வருடம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

சயின்டிஃபிக் கதைக்களத்தில்
தெலுங்கில் சயின்டிஃபிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஸ்கைலாப் என்ற படத்தில் நித்யாமேனன் நடித்து உள்ளார். இளம் நடிகர் சத்யதேவ் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல்
இதுவரை நடித்த எந்தவொரு திரைப்படத்திலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதால் இன்று வரை தென் இந்தியாவில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக நித்யா மேனன் உள்ளார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கக்கூடிய இவருக்கு பல மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்

முழுமதி அவளது முகமாகும்
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நித்யா மேனன் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது பௌர்ணமி நிலவு போல பளிச்சிடும் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் முழுமதி அவளது முகமாகும் என வர்ணித்து வருகின்றனர். தமிழில் அப்பாவின் மீசை என்ற படத்திலும் நித்யாமேனன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











