குண்டுமல்லி கணக்கா செம க்யூட்டா இருக்கும் நித்யாமேனன்!
சென்னை : கவர்ச்சியை காட்டாமல் தன்னுடைய நடிப்பின் மூலம் சிறந்த நடிகையாக திரைத்துறையில் வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை நித்யா மேனன்
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளவர் சூர்யா,விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார்
இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வரும் நித்யா மேனன் குண்டுமல்லி கணக்காக செம க்யூட்டாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓகே கண்மணி
சித்தார்த் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான 180 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நித்யா மேனன் வெப்பம்,மாலினி 22 பாளையம்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஓகே கண்மணி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். தற்போது உள்ள தலைமுறைக்கு ஏற்றவாறு காதல் படமாக வெளியான ஓகே கண்மணி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தனுஷுக்கு ஜோடியா
இதைத் தொடர்ந்து காஞ்சனா 2, 24, மெர்சல் ,இருமுகன், சைக்கோ என நித்யா மேனன் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை யாரடி நீ மோகினி பட இயக்குனர் ஜவஹர் இயக்கி வருகிறார்.

பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
தமிழைப் போலவே தெலுங்கிலும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நித்யா மேனன் இப்பொழுது ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் பீம்லா நாயக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் நடித்து வருகின்றனர். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இந்த திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத சூழல் காரணமாக இப்படம் பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார்.

குண்டுமல்லி கணக்கா
இதுவரை நடித்த அனைத்து திரைப்படங்களும் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கவர்ச்சி காட்டாமல் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நித்யா மேனன் மலையாளத்தில் 19 (1)(a)என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தென்னிந்தியாவில் ரவுண்டு கட்டி நடித்து வரும் நித்யா மேனன் குண்டுமல்லி கணக்கா செம க்யூட்டாக இருக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











