Nivetha pethuraj: தலைநிறைய மல்லி பூ.. கையில் மத்தாப்பூ.. நிவேதா பெத்துராஜின் தீபாவளி கொண்டாட்டம்!

சென்னை: தீபாவளி பண்டிகையை திரையுலக பிரபலங்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குடும்பத்துடன் நடிகர், நடிகைகள் தங்களுடைய தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நிவேதா பொத்துராஜ் தீபாவளி கொண்டாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்

மதுரையை பூர்வீகமாக கொண்ட நிவேதா பெத்துராஜ், தற்போது துபாயில் வீடுவாங்கி சென்று செட்டில் ஆனார். அவருக்கு மாடலிங் மற்றும் கார் ரேசிங் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவரான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெற்ற அடியே அழகே... பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், டிக் டிக் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

nivetha pethuraj diwali

ஆதங்கப்பட்ட நடிகை: நடிகை நிவேதா பெத்துராஜ் துபாயில் வீடுவாங்கி இருந்தார். அந்த வீடு 2000 ச.அடி பரப்பளவில் 50 கோடி விலை மதிப்புள்ள வீட்டில் துபாயில் வசித்துவருகிறார் என்றும், அதை ஒரு தமிழ் சினிமா நடிகரும், அரசியல் பிரமுகர் ஒருவரும் அவருக்கு பரிசளித்தார் என்று ஒரு கிசுகிசு இணையத்தில் பரவியது.இதற்கு விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு முன், கொஞ்சமாவது உண்மை என்ன என்பதை சரிபார்த்து மனிதாபிமானத்துடன் இருப்பார்கள் என்று நினைத்து அமைதியாக இருந்தேன்.

ஆனால் தற்போது நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துவருகிறோம். கண்ணியமான குடும்பத்தில் பிறந்து, 16 வயது முதல் சுயமாக வேலை செய்து வருமானம் ஈட்டிவருவதாகவும், தன்னைப் பற்றி செய்திவெளியிடும் முன்பு விவரத்தை முழுமையாக தெரிந்துகொண்டு மனிதாபிமானத்துடன் செய்தி வெளியிடுங்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

nivetha pethuraj diwali

தீபாவளி கொண்டாட்டம்: இந்நிலையில் தற்போது நேற்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி உள்ள நடிகை நிவேதா பொத்துராஜ், தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் அழகான நீல நிறத்தில் புடவை கட்டிக்கொண்டு, தலை நிறைய மல்லிப்பூ வைத்து, கையில் மத்தாப்பூவுடன் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி உள்ளார். அந்த வீடியோ பல லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X