உடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்
சென்னை: தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக, உடல் எடையை 15 கிலோ குறைத்து ஒல்லி பெல்லி ஆகியிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.
இதையடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக, திமிரு பிடிச்சவனில் நடித்திருந்தார். அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத் தமிழன் படத்தில் நடித்தார். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார். சங்கத்தமிழன் படத்துக்காக எடையை அதிகரித்திருந்த அவர், தெலுங்கு படம் ஒன்றுக்காக 15 கிலோ எடை குறைந்து ஒல்லி பெல்லி ஆகியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











