கருப்பு சேலையில் சிலை போல நின்று சிலிர்க்கவைக்கும் நிவேதா பெத்துராஜ்!

சென்னை : பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்

அலா வைகுண்டபுரம்லோ வெற்றிக்கு பிறகு தெலுங்கு பட வாய்ப்புகளையும் அதிக அளவில் குவித்து வருகிறார்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது பரிச்சயமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு சேலையில் சிலை போல நின்று கொண்டு பார்க்கும் அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளார்.

டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது

டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது

இயக்குனர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வழங்கிய இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்கள் கிடைத்தது. மேலும் ஒரு நாள் கூத்து இவரது மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது. இந்த நிலையில் தமிழில் அறிமுகமாகி நடித்து வந்த ஒரு சில படங்களிலேயே தெலுங்கு வாய்ப்புகளையும் கைப்பற்றினார்

இரண்டாவது கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ்

இரண்டாவது கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ்

அந்த வகையில் மெண்டல் மாதிலோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் தடத்தைப் பதித்த நிவேதா பெத்துராஜ் ஜாக்பாட் அடித்தது போல அடுத்தடுத்து படங்களிலும் தெலுங்கில் ஒப்பந்தமாகி வெற்றிநடை போட்டது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. உலகம் முழுவதும் சுமார் 400 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது இதில் இரண்டாவது கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார்

பொன்மாணிக்கவேல்

பொன்மாணிக்கவேல்

அலா வைகுண்டபுரம்லோ வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் பல மடங்கு இவருக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தமிழிலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகரும், இயக்குனரும் என பல முகங்களை கொண்டுள்ள பிரபுதேவா இப்பொழுது போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

Recommended Video

Nivedha Pethuraj Race Car பக்கம் திரும்பியுள்ளார் | Lady Thala Ajith, Car Racing
கருப்பு புடவையில் சிலை போல நின்று

கருப்பு புடவையில் சிலை போல நின்று

பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் பொன்மாணிக்கவேல் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் வெங்கடேஷ் பிரபுவின் பார்ட்டி படத்திலும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு புடவையில் நளினத்துடன் சிலை போல நின்று கொண்டு நிவேதா போஸ் கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் இப்பொழுது அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X