வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே.. நிவேதா பெத்துராஜ் அட்டகாசமான புகைப்படங்கள்!

சென்னை: வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் பக்கா பார்ட்டி மெட்டீரியலாக உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ்

தமிழை விடவும் தெலுங்கில் இவருக்கு அதிக படங்கள் குவிந்து வருவதால் தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் இப்பொழுது வெள்ளை ட்ரெஸ்ஸில் பார்ப்பதற்கு கொள்ளை அழகில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளார்

தமிழில் வெற்றி கொடி

தமிழில் வெற்றி கொடி

பொதுவாக நடிகைகள் பலரும் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் தமிழில் வெற்றி கொடி நாட்டுவார்கள் ஆனால் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான பிறகு இப்போது தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்.

சவாலான கதாபாத்திரங்கள்

சவாலான கதாபாத்திரங்கள்

கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றாலும் சரி சவாலான கதாபாத்திரங்கள் என்றாலும் சரி அதை தன்னுடைய நேர்த்தியான நடிப்பின் மூலம் கச்சிதமாக செய்து முடிக்கும் நிவேதா பெத்துராஜ் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஒரு நாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக்,திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் மற்றும் கடைசியாக வெளியான பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்கள் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தமிழில் வெளியாகி உள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பக்கா பார்ட்டி மெட்டீரியலாக அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து பார்ட்டி மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

தொடர்ந்து இரண்டாவது கதாநாயகியாக

தொடர்ந்து இரண்டாவது கதாநாயகியாக

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் நிவேதா பெத்துராஜ் அலவைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். இப்பொழுது விராட பர்வம் மற்றும் சண்டோ மூன்டேட்டி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

Recommended Video

Nivedha Pethuraj Race Car பக்கம் திரும்பியுள்ளார் | Lady Thala Ajith, Car Racing
வெள்ளை புறாவாக

வெள்ளை புறாவாக

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை ஆனால் எதிர்பார்க்கும் அளவிற்கு சவாலான கதாபாத்திரங்கள் வருவதில்லை அப்படி வந்தால் கட்டாயமாக தமிழில் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ள நிவேதா பெத்துராஜ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தெரிக்கவிடும் நிவேதா பெத்துராஜ் இப்பொழுது அழகான வெள்ளை உடையில் பார்ப்பதற்கு வெள்ளை புறா போல் உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே என வர்ணித்து பாடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X