தெருநாய்கள் பாவம்.. மனுஷங்க மட்டும் தான் வாழணுமா? அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க.. நிவேதா பெத்துராஜ்!
சென்னை: தெருநாய்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் என்ற என்ஜிஓ சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நிவேதா பெத்துராஜ், தெரு நாய்கள் பற்றி மக்கள் மனதில் தேவையில்லாத பயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
நாய் கடித்தால் அதை பெரிய விஷயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது. அதற்காக நாய் கடிப்பதை சரியான விஷயம் என்று நான் சொல்லவில்லை. ரேபிஸ் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. நாய்கள் கடிக்கும் விஷயத்தை ஊடகங்கள் பெரிதாக்கி செய்திகளில் போடுகிறார்கள். நாய் கடித்துவிட்டது என்ற செய்தியை சொல்லும்போதே, அதற்கு தீர்வு என்ன என்பது குறித்தும் செய்தியில் சொல்ல வேண்டும். நாய் கடித்து விட்டாலே ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. முறையாக பாதுகாக்கப்பட்ட நாய்கள் கடித்தால் ரேபிஸ் நோய் பரவாது. இதுபற்றி மக்களுக்கு முறையாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நடிகை நிவேதா பெத்துராஜ்: தெரு நாய்களை பிடித்து அகற்றி காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் நாலரை லட்சம் நாய்கள் இருக்கின்றன. இந்த நாலரை லட்சம் நாய்களுக்கும் காப்பகம் அமைக்க வேண்டும் என்றால் கிட்டதட்ட 2500 காப்பகங்கள் அமைக்க வேண்டும். அந்த காப்பகங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு, பாராமரிப்பு செலவு, வேலையாட்கள் செலவு என பல செலவுகள் இருக்கிறது. இதற்கு பதிலாக, இந்த பணத்தை என்ஜிஓவிடம் கொடுத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். அதை விட்டுவிட்டு காப்பகத்தில் 100 நாய்களையும் ஒரே இடத்தில் அடைத்தால், ஒன்னோடு ஒன்று சண்டை போட்டுக்கு இறந்துவிடும். இந்த உலகத்தில் மனிதர்கள் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைப்பது சரியில்லை. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











