சின்ன வயசுல எனக்கும் அந்த கெட்டப்பழக்கம் இருந்துச்சு.. வெட்கத்துடன் ஓப்பனாக ஒப்புக்கொண்ட பிரபல நடிகை
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது குழந்தை பருவ நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சென்னை: சிறுவயதில் தனக்கு இருந்த திருட்டு பழக்கம் பற்றி நடிகை நிவேதா பெத்துராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள பார்ட்டி, பொன்மாணிக்கவேல், ஜகஜாலக்கில்லாடி ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களுடன் கலந்துரையாடல்
நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கக்கூடியவர். அதன் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார். நிவேதா அவ்வப்போது ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கம்.

சிறுவயது நினைவுகள்
அந்த வகையில் அவர் தனது ரசிகர்களிடம், அவரவருடைய குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டிருந்தார். நிறைய ரசிகர்கள் தங்களுடைய சிறுவயது நினைவுகளை பகிர்ந்தனர். அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து தனது இன்ஸ்டா ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.

சாக்பீஸ் திருட்டு
அதில் ஒரு ரசிகர், சிறுவயதில் தான் பள்ளியில் இருந்து சாக்பீஸ்களை திருடிக்கொண்டு வருவேன் என தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளித்துள்ள நிவேதா, சிறுவயதில் தனக்கும் அந்த பழக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சாக்பீஸ்களை திருடி அம்மாவிடம் கொடுத்து கோலம்போட சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு நேரம்
மேலும் ஒரு ரசிகர் தன்னுடைய சிறுவயதில் மின்வெட்டு ஏற்படும் நேரத்தில், அக்கம்பக்கத்தில் உள்ள மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து கதை பேசி, விளையாடி மகிழ்ந்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதற்கு நிவேதா, சிறுவயதில் தானும் அதுபோல் விளையாடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மின்வெட்டு சமயத்தில் முகத்தில் டார்ச்லைட் அடித்து, பிறரை பயமுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் பாராட்டு
இதுபோல் நிறைய ரசிகர்களுக்கு நிவேதா பதில் அளித்துள்ளார். நிவேதாவின் இந்த பதிவை ரசிகர்கள் வெகுவாக ரசித்துள்ளனர். கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நடிகைகளுக்கு மத்தியில், ரசிகர்களுடன் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடும் நிவேதாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!


Click it and Unblock the Notifications











