காதல்ன்னா என்ன தெரியுமா.. அது எப்படியிருக்கும் தெரியுமா? பிரபல நடிகையின் அசத்தல் விளக்கம்!
சென்னை: காதல் பற்றிய உங்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் அசத்தலாய் பதில் அளித்திருக்கிறார்.
தமிழகத்தின் கோவில்பட்டியை பூர்விகமாக கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் சிறுவயதிலேயே பெற்றோருடன் துபாயில் செட்டிலாகிவிட்டார்.
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.

தெலுங்கு சினிமா
2016ஆம் ஆண்டு அவர் நடித்த ஒரு நாள் கூத்து படம் ரீலிசானது. தமிழில் அறிமுகமான சூட்டோடு தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். தெலுங்கு சினிமாவில் மென்டல் மதிலோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பொன்மானிக்கவேல்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் படத்திலும் நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து தமிழ் தெலுங்கு என படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரசிகர்களுடன் பேச்சு
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நிவேதா பெத்துராஜ், அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார்.

சொல்ல முடியாத இடத்தில்
இந்நிலையில் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் நிவேதா பெத்துராஜ். அப்போது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிவேதா பெத்துராஜ் சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல் என்று நச்சென பதில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











