Nivetha thomas: படத்துல அம்மாவா நடிச்சிருக்கேன்.. அதுக்குள்ள நிஜத்திலேயே.. நிவேதா தாமஸ் விளக்கம்

திருவனந்தபுரம்: நடிகை நிவேதா தாமஸ் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து கமல்ஹாசனின் பாபநாசம், ரஜினிகாந்தின் தர்பார் ஆகிய படங்களிலும் இவர் அடுத்தடுத்து லீட் கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தர்பார் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதையடுத்து மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நிவேதா. இந்நிலையில் இவருக்கு திருமணம் நடக்கப் போவதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து தற்போது நிவேதா தாமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

Nivetha Thomas Darbar movie Marriage

நடிகை நிவேதா தாமஸ்: நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதிகமாக மலையாள படங்களில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கிலும் இவரை அதிகமாக காண முடிகிறது. தமிழில் விஜய்யுடன் குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து அவருடனேயே ஜில்லா படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். முன்னதாக போராளி, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் தர்பார், பாபநாசம் படங்களிலும் நடித்துள்ளார்.

35 தெலுங்கு படம்: வக்கீல் சார் என்ற படத்தை தொடர்ந்து தெலுங்கில் தற்போது 35 என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ராணா டகுப்பாட்டி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நிவேதா தாமஸுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்து வருகிறது. படத்தில் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார் நிவேதா. படத்தில் கௌதமி, பாக்யராஜ் உள்ளிட்டோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிவேதா தாமஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த பதிவு பேசு பொருளாகியுள்ளது.

திருமண வதந்தி: தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அதிக நாளாகி விட்டது, ஆனால் இறுதியாக இன்று என்று குறிப்பிட்டு ஹார்ட் எமோஜியுடன் நிவேதா தாமஸ் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிவேதா தாமஸ், தான் நடிக்கும் படம் சம்பந்தமாக ஒரு பதிவை வலைதளத்தில் வெளியிட்டதாகவும் அதை பார்த்த ரசிகர்கள் தனக்கு திருமணம் ஆகப்போவதாக பேசியதாகவும் குறிப்பிட்டார். தன்னுடைய அம்மாவும் இந்த வதந்தி குறித்து தன்னை கிண்டலடித்ததாகவும் கூறியுள்ளார்.

திருமணமாகி 2 குழந்தைகள்: தனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதாகவும் நிவேதா தாமஸ் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். தான் நடித்துள்ள 35 படத்தில் தான் தனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள், படத்தில் தாயாக நடித்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்குள் தனக்கு திருமணம் நடக்க உள்ளதாக வதந்திகள் பரவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X