ஜிலு ஜிலு… கூல் கூல்…புடவையில் கலக்கிய நிவேதா தாமஸ்!
சென்னை : நடிகை நிவேதா தாமஸ் கொரியன் மொழியில் வெளியான மிட் நைட் ரன்னர்ஸ் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் பட வாய்ப்புகள் சரியாக இல்லாததால் தெலுங்கு பக்கமே இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் மிகப்பெரிய அளவில் பெற்று, தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

குழந்தை நட்சத்திரம்
90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் ஃபேவரிட்டாக இருந்த மை டியர் பூதம் ஃபேண்டசி சீரியல் நெடுந்தொடரில் குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் இப்போது வளர்ந்து கதாநாயகியாக பல திரைப்படங்களை நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

கமலின் மகளாக
பாபாநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் அமைதியாக இயல்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.மேலும்,ஜில்லா திரைப்படத்திலும்,ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார்.

வசூல்சாதனை
அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம்தெலுங்கில்பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபிசியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய வசூலை வாரிக்குவிந்தது. இதில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

கொரிய மொழி படம்
கொரியன் மொழியில் வெளியான மிட் நைட் ரன்னர்ஸ் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து வருகிறார். ஷாகினி தாகினி என்ற பெயரில் இப்படம் உருவாக உள்ளது. இதில் ரெஜினாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

ஜிலு ஜிலுனு புடவையில்
தமிழ் , தெலுங்கு, மலையாளம் என 3 மொழி திரைப்படங்களில் பஸியாக நடித்து வரும் நிவேதா தாமஸ். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூகவலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர், ஜிலு ஜிலுனு புடவையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











