ஸ்லீவ்லெஸ் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அனைவருக்கும் அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிவேதா தாமஸ்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர். சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டதுடன் சில காட்சிகளில் கண்ணீரையும் வரவழைத்து இருப்பார்.

நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்சன் ப்ளாக் பஸ்டர் திரைப்படமான வி -யில் நடித்திருந்த நிவேதா தாமஸ் இப்பொழுது பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படத்திலும் நடித்து வர தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ்ஸில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

மிக வேகமாக வளர்ந்து

மிக வேகமாக வளர்ந்து

90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் ஃபேவரிட்டாக இருந்த மை டியர் பூதம் ஃபேண்டசி சீரியல் நெடுந்தொடரில் குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் இப்போது வளர்ந்து கதாநாயகியாக பல திரைப்படங்களை நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் அதிக அளவு நடித்துவரும் நிவேதா தாமஸ் விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.

சென்டிமென்ட் காட்சிகளில்

சென்டிமென்ட் காட்சிகளில்

விஜய்யுடன் ஜில்லா திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தது அனைவரது மனதையும் கண்ணீரால் நனைய வைத்த நிவேதா, சமீபத்திலே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல காட்சிகளில் சிரிக்க வைத்திருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளில் அனைவரது உள்ளங்களையும் கண்ணீரில் நனைய வைத்தார்.

வக்கீல் சாப்

வக்கீல் சாப்

அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பிங்க் ஏற்கனவே தமிழில் நேர்கொண்டபார்வை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நிலையில் அதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருக்க, வசூலில் வேற லெவல் கல்லா கட்டியது. இப்போது இந்தத் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் தயாராகி வர அதில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து மேலும் இரண்டு தெலுங்கு திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

பதறிய ரசிகர்கள்

பதறிய ரசிகர்கள்

இவ்வாறு ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக அன்று முதல் இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நிவேதா தாமஸ் இப்பொழுது முதல் முறையாக ஸ்லீவ்லெஸ்ஸில் ட்ரெஸ்ஸில் டீ குடித்தவாறு வெளியிட்ட புகைப்படத்தில் அவரது கை முழுவதும் புள்ளி புள்ளியாக, ஏதோ வித்தியாசமாக இருக்க அதை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் என்ன ஆச்சி நிவேதா கையில என அன்போடு விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X