புடவையில் எவ்ளோ அழகா இருக்கீங்க..நிறைய தமிழ் படங்களில் நடிக்கலாமே நிவேதா!
சென்னை: தர்பார் படத்தின் புரேமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவேதா தாமஸ் அப்போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் புடவையில நீங்க இவ்வளவு அழகாக இருக்கீங்க என்று பாசத்தைப் பொழிந்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமாகி பின் ஹீரோயின் ஆனவர் தான் நிவேதா தாமஸ். சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியல் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் நிவேதா தாமஸ். இது அவருக்கு நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தனது முதல் திரை பயணத்தை மலையாள சினிமாவில் துவங்கினார். தன் முதல் படத்தில் நடிகர் ஜெயராம்க்கு மகளாக நடித்தார். இதன் பின் தனது இரண்டாவது படத்திலேயே இளைய தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்தார். பின்னர் பல படங்களில் நடித்த நிவேதா தாமஸ் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்திய திரைப்படம் தட்டத்தின் மறையத்து என்ற மலையாள படமாகும்.

இதில் நடித்த பிறகு தான் தமிழ் மற்றும் மலையாளத்தில் இவருக்கு நிறைய படங்கள் குவிந்தன. பின்னர் தமிழில் இவர் ஹீரோயினாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அறிமுகமானார். இதற்கு அடுத்து மீண்டும் தளபதி விஜய்க்கு தங்கை ஜில்லா படத்தில் நடித்தார் நிவேதா தாமஸ். கில்லி படத்திற்கு பிறகு விஜய்யின் தங்கை கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது இந்த படத்தில் தான்.

பின்னர் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார் நிவேதா. அந்த படத்தில் இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். அவரின் நடிப்பு இதன் பின் தெலுங்கு பட வாய்ப்புக்கள் கிடைக்க சுமார் மூன்று வருடமாக அங்கே படம் நடித்து கொண்டு இருந்தார். தற்போது திரைக்கு வரவிருக்கும் சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
தர்பார் படத்தின் புரேமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் புடவையில் நீங்க இவ்வளவு அழகாக இருக்கீங்க ஆனால் ஏன் நிறைய தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றும் தமிழில் நீங்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











