அப்பாங்கற விஷயத்துல இருந்து தள்ளிப்போக முடியல.. கமல்ஹாசன் குறித்து கண்கலங்கிய நிவேதா தாமஸ்!

சென்னை: நடிகை நிவேதா தாமஸ் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்திருந்த போதிலும் தமிழிலும் இவருக்கு அடுத்தடுத்து சிறப்பான வாய்ப்புகள் அமைந்தன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நிவேதா தாமஸ் தமிழில் நடித்திருந்த தர்பார், பாபநாசம் படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரைட்டாக அமைந்துள்ளன.

தர்பார், பாபநாசம் படங்களில் நிவேதா தாமஸின் நடிப்பு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகை என தன்னை அவ்வப்போது பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார் நிவேதா தாமஸ். ஆயினும் தான் நடிகர் கமல்ஹாசனின் மகளாக உணர்வதாகவும் அதை விட்டு தன்னால் தள்ளிப் போக முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Nivetha Thomas Kamal haasan

நடிகை நிவேதா தாமஸ்: நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். முன்னதாக தமிழில் பாபநாசம் மற்றும் தர்பார் என கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளார் நிவேதா தாமஸ். விஜய்யுடன் ஜில்லா படத்தில் தங்கையாகவும் நடித்து அசத்தியிருந்தார். ஆயினும் நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் பாபநாசம் படங்கள் மிகச்சிறப்பான வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தன. இதில் ரஜினிகாந்துடன் நடித்த தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நிவேதா தாமஸுக்கு ரஜினிக்கு அடுத்த படியாக வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்தது.

நிவேதா தாமஸ் பேட்டி: தர்பார் படத்தில் நயன்தாரா, ரஜினிகாந்த், யோகி பாபுவுடன் இணைந்து நிவேதா தாமஸ் நடித்திருந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. ஆயினும் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தின. தான் எப்போதுமே ரஜினி ரசிகைதான் என்று நிவேதா தாமஸ் அவ்வப்போது தன்னுடைய பேட்டிகளில் கூறி வருகிறார். இந்நிலையில் பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து முன்னதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் நிவேதா தாமஸ் கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Nivetha Thomas Kamal haasan

அப்பாவாக கமலை பெருமைப்படுத்துவேன்: பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக தான் நடித்திருந்த நிலையில் தான் அவருடைய மகள்தான் என்பதில் இருந்து வெளியில் வரவில்லை என்று நிவேதா தாமஸ் கூறியிருந்தார். கமல்ஹாசன் தனக்கு படிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் மிகவும் உதவியாக இருந்ததை குறிப்பிடும்போது நிவேதா தாமஸ் உடைந்து அழுததை பார்க்க முடிந்தது. தான் நடிக்கும் வரையிலும் கமல்ஹாசனை பெருமைப்படுத்தும் வகையில் நடிப்பேன் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். நடிப்பிலும், படிப்பிலும் ஒரு அப்பாவாக கமல்ஹாசனை பெருமைப்பட வைப்பேன் என்று கண்ணீருடன் நிவேதா தாமஸ் பேசியதை பார்க்க முடிந்தது.

கமலுக்கு நன்றி: தனக்கு கமல்ஹாசன் செய்த அனைத்து விஷயங்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நிவேதா தாமஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார். அவரது இந்த பேட்டியை நெகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் பார்த்ததையும் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ரசிகர்கள் கண்டு ரசிக்க முடிந்தது. ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கொள்ளைக் கொண்டிருந்தார் நிவேதா தாமஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X