ஆண் குழந்தைக்கு அம்மாவானார் எம்பியும்.. நடிகையுமான நஸ்ரத் ஜஹான்.. குவியும் வாழ்த்து!

கொல்கத்தா: பிரபல பெங்காலி நடிகையும் எம்பியுமான நஸ்ரத் ஜஹான் ஆண் குழந்தைக்கு அம்மாவாகியுள்ளார்.

பிரபல பெங்காலி நடிகையான நஸ்ரத் ஜஹான் ராஜ் சக்கவர்த்தியின் ஷோட்ரு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கோக்கா 420 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நஸ்ரத் ஜஹான் அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார் நஸ்ரத் ஜஹான். இதில் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தொழில் அதிபர் நிகில் ஜெயினுடன் காதல்

தொழில் அதிபர் நிகில் ஜெயினுடன் காதல்

எம்பியாக இருந்த போதும் தனது சினிமா தொழிலையும் மேற்கொண்டு வந்தார். இந்த ஆண்டு அவரது நடிப்பில் டிக்ஷனரி மற்றும் ஸ்வாஸ்திக் சன்கெட் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆயின. இந்நிலையில் நுஸ்ரத் ஜஹான் 2018 ஆம் ஆண்டு முதல் தொழிலதிபர் நிகில் ஜெயினுடன் காதல் உறவில் இருந்தார்.

2019ஆம் ஆண்டு திருமணம்

2019ஆம் ஆண்டு திருமணம்

அவர்கள் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துருக்கியில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மிமி சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த சில மாதங்களில் தனது திருமணம் சட்டபூர்வமானது அல்ல என்று நஸ்ரத் கூறியிருந்தார்.

இது ஒரு லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான்

இது ஒரு லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான்

"வெளிநாட்டில் வசிப்பது, துருக்கிய திருமண விதிமுறைகளின்படி, இந்த திருமணம் செல்லாது. மேலும், இது ஒரு சர்வமத திருமணம் என்பதால், இந்தியாவில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அது செல்லுபடியாகும் என்றார். மேலும் இது ஒரு லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான் என்றும் கூறியிருந்தார் நஸ்ரத்.

பொறுப்பான கணவனாக என்னை அர்ப்பணித்தேன்

பொறுப்பான கணவனாக என்னை அர்ப்பணித்தேன்


அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். ஆனால் நஸ்ரத்தின் கணவர், நிகில் ஜெயின் அவர்கள் கணவன் -மனைவியாக ஒன்றாக வாழ்ந்ததாகவும், தங்களை ஒரு திருமணமான தம்பதியராக சமூகத்தில் அறிமுகப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். "நான் எனது நேரத்தையும் வளத்தையும் ஒரு விசுவாசமான மற்றும் பொறுப்பான கணவனாக அர்ப்பணித்தேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இன்று பகல் ஆண் குழந்தை பிறந்தது

இன்று பகல் ஆண் குழந்தை பிறந்தது

இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த நஸ்ரத் ஜஹான், நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள நியோடியா மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இன்று பகல் 12 மணி அளவில் நஸ்ரத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது.

உடன் இருந்த நடிகர் யாஷ் தாஸ் குப்தா

உடன் இருந்த நடிகர் யாஷ் தாஸ் குப்தா

தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும், இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. நஸ்ரத் ஜஹானின் நண்பருமான நடிகர் யாஷ் தாஸ்குப்தா மருத்துவமனையில் இருந்ததாக திரைப்படத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாய்க்கும் சேய்க்கும் வாழ்த்துகள்

தாய்க்கும் சேய்க்கும் வாழ்த்துகள்

இதனிடையே ஜஹானின் பிரிந்த கணவர் நிகில் ஜெயின், "எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நான் பிறந்த குழந்தைக்கு மற்றும் அவரது தாய்க்கு நல்வாழ்த்துக்கள். ஆண் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்" என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நஸ்ரத் ஜஹானுக்கு குவியும் வாழ்த்து

நஸ்ரத் ஜஹானுக்கு குவியும் வாழ்த்து

நஸ்ரத் ஜஹானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு சினிமா பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை நஸ்ரத் ஜஹான் கர்ப்பிணியாக இருந்ததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X