ஃபிளைட்டில் இடுப்பில் கை வைத்த தொழில் அதிபர்... நடந்தது என்ன? மனம் திறந்த நடிகை!
மும்பை: ஃபிளைட்டில் தனது இடுப்பில் கை வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
டெல்லி - மும்பை விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொழில் அதிபரான அந்த நபர் மீது இந்திய அரசியல் சட்டம் 354 மற்றும் 354ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகைக்கு தொல்லை
இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நடிகை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்த சம்பவம் அக்டோபர் 3ஆம் தேதி நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கடந்த 3ஆம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு டெல்லியில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் புறப்பட்டேன்.

என் அருகில் இல்லை
அந்த விமானம் மும்பையில் காலை 11 மணியளவில் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் இறங்குவதற்காக தங்கள் இருக்கைகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். இந்த மனிதன் எனக்குப் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவர் என் அருகில் இல்லை. என் அருகில் அமரவில்லை. முதல் வரிசையில் பயணிகள் நகர்ந்து சென்ற போது நான் காத்திருந்தேன்.

இடுப்பில் கை வைப்பதை உணர்ந்தேன்
சில நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென்று யாரோ என் இடுப்பில் கை வைப்பதை உணர்ந்தேன். அவர் என்னை அவரை நோக்கி இழுத்தார். நான் கோபத்தில் கத்தியபோது, அவர், 'ஓ, அது ஒரு பெண் என்பதை நான் உணரவில்லை, அது ஒரு ஆண் சக பயணிகள் என்று நான் நினைத்தேன்! என்றார்.

மன்னிப்பு கேட்டார்
பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார். யாரோ ஒரு பெண்ணைப் பிடித்து இழுத்துவிட்டு பின்னர் ஒரு ஆண் பயணி என்று நினைத்ததாக அவர் கூறியது அபத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார். இதையடுத்து தான் கூச்சலிட்டதால் இந்த விவகாரம் தொடர்பாக மெயில் அனுப்புமாறு விமான நிலைய கஸ்டமர் கேர் டீம் கேட்டுக் கொண்டதாகவும் தான் புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த நபரை 14ஆம் தேதி கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரொம்வே மன உளைச்சலுக்கு
பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். பல படங்களிலும் நடித்துள்ளார். தான் இந்த சம்பவத்தால் ரொம்வே மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். பட்டபகலில் நடிகைக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











