Just In
- 1 hr ago
சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!
- 1 hr ago
ரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க!
- 3 hrs ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
- 3 hrs ago
தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
பட்ஜெட் 2021: மக்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான்.. மோடி அரசு நிறைவேற்றுமா!!
- News
ஸ்டாலின் எந்த தொகுதி சொல்றாரோ...அங்கு கண்ணைமூடிட்டு போட்டியிடுவேன்...சொல்றது யாருனு பாருங்க!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!!
- Lifestyle
யாரெல்லாம் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளக்கூடாது தெரியுமா? உஷாரா இருங்க...!
- Sports
திறமைக்கு சல்யூட்.. என்ன ஒரு உறுதி.. இந்திய அணிக்கு ஆஸி. கிரிக்கெட் வாரியம் எழுதிய ஓபன் லெட்டர்!
- Automobiles
விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போட்டோஷூட்டில் கலக்கும் ஓவியா... இத உங்க கிட்டருந்து எதிர்பார்க்கல!
சென்னை : தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நடிகை ஓவியா இதுவரை கவர்ச்சிகரமான புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்த நிலையில் இப்பொழுது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் பிக்ஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இவர் நடித்த சில திரைப்படங்கள் மக்களை கவர்ந்து இருந்தாலும் இன்று வரை முன்னணி நடிகையாக வர போராடிக்கொண்டிருக்கும் ஓவியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு இன்று வரை யாருக்கும் கிடைக்காத ஒன்று.
களவாணி 2 திரைப்படத்திற்கு பிறகு பிக் பாஸ்ஸில் கிசுகிசுக்கப்பட்ட ஆரவுடன் இணைந்து ராஜபீமா என்ற படத்தில் நடித்து வரும் ஓவியா அட்டகாசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வேட்டையை தொடங்கினார்
பிரபல மலையாள மங்கையான ஓவியா தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக களவாணி திரைப்படம் மாற்றியது. எனினும் கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட ஓவியா அதைத் தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வர தமிழ், கன்னடம் என மற்ற மொழிகளிலும் தனது வேட்டையை தொடங்கினார்.

செம பிஸி
களவாணி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அடுத்தடுத்து திரைப்படங்கள் இவருக்கு குவிய மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் என அனைத்து திரைப்படங்களும் ஹிட்டடிக்க செம பிஸியானார் ஓவியா.

துணிச்சலான பேச்சு
இந்நிலையில் பாலிவுட்டில் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் அதில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட ஓவியா துணிச்சலான பேச்சின் மூலம் பெரும்பான்மையான ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இன்று வரை தமிழ் பிக் பாஸில் அனைவராலும் கவரப்பட்ட போட்டியாளர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிசுகிசுக்கப்பட்ட ஆரவ்
இந்நிலையில் களவாணி திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கிசுகிசுக்கப்பட்ட ஆரவ் உடன் இணைந்து "ராஜபீமா" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அட்டகாசமான உடையில்
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா அடிக்கடி வெளிப்படையாக பேசுகின்றேன் என்ற பெயரில் சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இதற்கு முன் அரைகுறை ஆடையில் மட்டுமே புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் இப்பொழுது அனைவரும் அசந்து போகும் வகையில் அட்டகாசமான உடையில் பளிச்சிடும் பெரிய மூக்குத்தி அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள மெய்மறக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருவதோடு இப்பொழுது வைரலாகி வருகிறது.