Oviya: வீடியோ லீக்.. ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்.. நெட்டிசன்களுக்கு சுளீர் பதில் அளித்த ஓவியா
சென்னை: நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் கவனிக்கத்தகும் கதாபாத்திரங்களில் வெற்றிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவரது நடிப்பு மட்டும் இல்லாமல் இவரது குழந்தைத் தனத்திற்கும் இப்போதும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். குறிப்பாக ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அவரது குணாதிசயத்திற்காகவே அதிகமானார்கள்.
ஓவியா ஆர்மி என்ற ரசிகர் மன்றத்தை உருவாக்கி ஓவியாவுக்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில் இணையத்தில் வேகமாக ஓவியா என ட்ரெண்ட் ஆனது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து தனது கையை அவர் கிழித்துக் கொண்டதால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் சீசன் ஒன்றிலேயே நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் ஓவியாவின் பங்கு கணிசமானது. பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் நேற்று அதாவது அக்டோபர் 12ஆம் தேதி இணையத்தில் ஒருவரின் அந்தரங்க வீடியோ வேகமாக பரப்பப்பட்டது. மேலும், அந்த வீடியோவில் இருப்பது ஓவியா எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரிடமே ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு அட்டகாசமாக பதில் அளித்துள்ளார்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் ரசிகர்களின் மனம் கவரும் நடிப்பினை வெளிப்படுத்தி தனது முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தினைப் பெற்றார்.ஓவியாவின் இயற்பெயர் ஹெலன் நெல்சன். சினிமாவிற்காக ஓவியா என மாற்றி வைத்துக் கொண்டார். இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களைக் கடந்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்றின் மிகவும் முக்கியமான போட்டியாளராக மாறினார். இவரது நடவடிக்கைகள் ரசிகர்களுக்குப் பிடித்து போனதால் ரசிகர்கள் இவருக்கு ஓவியா ஆர்மி தொடங்கி ஓவியாவுக்கு ஆதரவு அளித்தனர். மெரினா, களவானி, முடர் கூடம், மதயானைக் கூட்டம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்னர் மலையளத்திலேயே இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்: தமிழ், மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் கவனிக்கத்தகுந்த பிரபலமாக மாறினார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம்பேர் பின் தொடருகின்றனர். ஒரு கட்டம் வரை ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஓவியா, அதன் பின்னர் கவர்ச்சியில் களமிறங்கினார்.

வாய்ப்புகள்: இவருக்கு அதிகம் ஊர் சுற்றும் பழக்கம் இருப்பதால் இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அங்கு அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் இவருக்கு தொடர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியே உள்ளார்.
பதில்: இந்நிலையில் நேற்று இணையத்தில் இருவரின் அந்தரங்க வீடியோ பரப்பப்பட்டது. மேலும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஓவியா எனவும் கூறப்பட்டது. இதனால் ஓவியா என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இப்படியான நிலையில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் கமெண்ட் செக்ஷனில் ஒருவர், '17 நொடிகளுக்கு வீடியோ வந்துள்ளது' எனக் கூற, அதற்கு ஓவியா 'என்ஜாய்' என பதில் அளித்திருந்தார். அதன் பின்னர் அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார். மேலும் மற்றொருவர் வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா என கமெண்ட் செய்ய, அதற்கு ஓவியா, 'அடுத்த முறை ப்ரோ' என பதில் அளித்துள்ளார். அதேபோல் மற்றொரு இணையவாசியிடம் வீடியோவின் லிங்கையும் கேட்கின்றார்.
அபத்தம்: ஓவியாவின் இப்படியான பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக சினிமா பிரபலங்கள் குறித்து இது போன்ற வீடியோ வெளியானால், உடனே அது நான் இல்லை என மறுப்பார்கள். ஆனால் ஓவியா அவ்வாறு எதுவும் செய்யாமல், இணையவாசிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேபோல், இருவரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயத்தை மறைமுகமாக வீடியோ எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவது என்பது அபத்தமான செயல் என புரிந்து கொண்ட இணையவாசிகளும் ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











