நீங்களே இப்படி பண்ணலாமா ஓவியா.. ஆர்மியை திருப்திப்படுத்த இப்படி எல்லாமா ரிஸ்க் எடுக்கிறது?

ஓவியாவின் செல்ஃபி புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

Recommended Video

Oviya recent selfie photo from a high tower building

சென்னை: நடிகை ஓவியா மிகவும் உயரமான பகுதி ஒன்றில் இருந்து ஆபத்தான வகையில் செல்ஃபி எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. ஆனால் பிக் பாஸ் முதல் சீசன் தான் அவரை மக்களிடம் பிரபலமாக்கியது.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது பெயரில் பல ஆர்மிகள் சமூல வலைதளங்களில் ஆரம்பிக்கப்பட்டன. பட்டிதொட்டி எங்கும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் ஓவியா நடிக்கும் படங்களுக்கும், சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி அவரது படங்கள் எதுவும் வெற்றிப்பெறவில்லை.

சர்ச்சையான 90 எம்எல்

சர்ச்சையான 90 எம்எல்

ஓவியா கதையின் நாயகியாக நடித்த 90 எம்எல் படமும் பெரும் சர்ச்சையில் சிக்கியது. சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஓவியா, அவ்வளவாக ஆக்டிவாக இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

ரசிகர்கள் வேண்டுகோள்

ரசிகர்கள் வேண்டுகோள்

எனவே சமூக வலைதளங்களிலாவது அடிக்கடி புதிய புகைப்படங்களை வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஓவியாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை தொடர்ந்து ஓவியா தற்போது தனது புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

ஆபத்தான செல்ஃபி

ஆபத்தான செல்ஃபி

அதில் ஒரு புகைப்படத்தில் மிகவும் உயரமான இடத்தில் இருந்து ஓவியா செல்ஃபி எடுத்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் பதறிவிட்டனர். "நீங்களே இப்படி செய்தால், உங்கள் ரசிகர்களும் அதைத்தானே பின் தொடர்வார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா". என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திட்டும் நெட்டிசன்கள்

திட்டும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தான் நெட்டிசன்கள் ஓவியாவை திட்டி பதிவுகள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X