பல காதல் தோல்விகள்.. பணத்தால் ஏமாற்றப்பட்டேன்.. எமோஷனலாக பேசிய ஓவியா
சென்னை: கேராளவை பூர்வீகமாகக் கொண்ட ஓவியா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ் ஆனார். அவருக்கென்று சமூக வலைதளங்களில் ஆர்மியும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் பிக்பாஸுக்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் ஓவியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா; அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்த படங்களும் சரியாக ஹிட்டாகவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மட்டும் நன்றாக ஓடியது. ஆனால் அந்தப் படத்தில் ஓவியா பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

பிக்பாஸ் ஓவியா ஆர்மி: பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார். அதில் ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுக்கென்று தனி ஆர்மியை ஆரம்பித்தார்கள். தனது மனதில் பட்டதை பேசும், செய்யும் அவரை வைத்து மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பரப்பினர். ரொம்பவே ஃபேமஸ் ஆனதால் ஓவியாதான் முதல் சீசனில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார்.
காதல்: இதற்கிடையே பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா தனது சக போட்டியாளர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருந்தார். எனவே இரண்டு பேரும் காதலிப்பதாக பலரும் கூறினர். ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தனர். பிக்பாஸ் முடிந்த பிறகு இரண்டு பேரும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தவகையில் ஓவியா காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றது.
திருமணம் இல்லை: ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் பிக்பாஸுக்கு பிறகும் இல்லாததால் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் ஆரவ்தான் என கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்தார். மேலும் ஓவியா ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கூறினர். அதனையும் ஒரு பேட்டியில் திட்டவட்டமாக மறுத்தார்.
ஓவியா பேட்டி: இந்நிலையில் ஓவியா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "காதலித்து பலர் என்னை ஏமாற்றினார்கள். இதற்கு முன்பும் பல உறவுகளில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் எங்களுக்கு செட் ஆகவில்லை. இதுமட்டுமின்றி சிலர் பண விஷயத்திலும் என்னை ஏமாற்றினார்கள்" என்றார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளரான ஆரவ்வை ஓவியா காதலிப்பது போன்று அவரது செயல்பாடுகள் பிக்பாஸ் ஹவுஸுக்குள் இருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











